ஹெச்.ராஜா விளக்கம் ஏற்புடையதல்ல; நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஹெச்.ராஜா விளக்கம் ஏற்புடையதல்ல; நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பெரியார் சிலை குறித்த பதிவுக்கு ஹெச்.ராஜா அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ”திரிபுராவில் நடந்த சிலை அகற்றுதல் நிகழ்ச்சி, தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற பெரியார் சிலைக்கு ஏற்பட்ட அவமானம். இதை எல்லாம் பார்க்கும்போது பாஜக கட்சி வேதனை அடைகிறது. இந்தச் செயல்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்பதை பிரதமரும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்துக்கு எதிரான நிலையில் எவருடைய சிலையையும் யார் அவமானப்படுத்தினாலும்…

Read More

இலங்கையில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி புத்த சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இலங்கையில் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி புத்த சமூகத்தினர் போலீஸ் நிலையம் முன் போராட்டம்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே புத்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 41 வயதான ஒரு சிங்களர் தாக்குதலுக்கு உள்ளானார். இரு ஆட்டோக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறு இரவு அவர் மரணமடைந்தார். இதை தொடர்ந்து திஹன பகுதியில் வன்முறைகள் தொடங்கின. தெல்தெனிய பகுதியை…

Read More

கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ., காவல்

கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ., காவல்

கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ.,காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க முடியாது என டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட் கைவிரித்து விட்டது. மேலும் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று அவரை மேலும் 3 நாள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் மாஜி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி கைது செய்யபட்டுள்ளார். அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுத்தர கார்த்தி தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. இதில் சம்பந்தப்பட்ட இந்திராணி முகர்ஜியும், கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் ஒத்து கொண்டார். கடந்த 5 நாள் விசாரணயைில் கார்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு…

Read More

உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினாலும், உண்மையாக எந்தஒரு மாற்றமும் கிடையாது. உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஹக்கானி நெட்வோர்க் மற்றும் தலிபான் அமைப்புகள் பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அமெரிக்கா அங்கு தொடர்ச்சியாக வான்வழி தாக்குதலையும் மேற்கொண்டு…

Read More

இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

இலங்கை தமிழர் பிரச்சினையின் போது திமுக எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று மீன்வளத் துறை அமைச் சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்த முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதப்பட்டது. முதலில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசுங் கள் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் அழைத்துப் பேசினார். அங்கே உள்ளே ஒன்றை பேசிவிட்டு, வெளியே வந்து வேறுவிதமாகப் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல. முதல்வர் தலைமை யில்…

Read More

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல்: நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான 3-ம் கட்ட நேர்காணல் நாளை முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை அறிவிப்பதற்கு முன்பாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அதன் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் மற்றும் செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நேர்காணல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஜனவரியில் வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. பின்னர் 2-ம் கட்டமாக தேனி, நீலகிரி உள்ளிட்ட ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேர்காணல்…

Read More

ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ட்ராய், செல்போன் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ட்ராய், செல்போன் நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளர்களை பாதிக்கும்வகையில் செயல்பட்ட ஏர்செல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சரவணகுமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பைப் பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகை பாக்கி காரணமாக செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண…

Read More

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

“காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நாமக்கல்லில் நடந்த வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 11-வது தமிழ் மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “வங்கிகளில் தொழில் செய்வதாக கூறி கடனை பெற்று கையாடல் செய்துவிட்டு பிற நாடுகளுக்கு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பெற்ற கடனை இந்தியாவில் முறைப்படி முதலீடு செய்து இருந்தால் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இந்திய அரசையும், மக்களையும் ஏமாற்றி தப்புபவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் அரசு இதற்காக புதிய சட்டத்தை கொண்டு வந்து உள்ளது….

Read More

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

வட கிழக்கு மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுரா, நாகலாந்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை பெற்று முன்னணியில் உள்ளது. திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு…

Read More

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு விவகாரத்தில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் தேவகோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகர தலைவர் பஞ்சநாதன் வரவேற்றார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசினர். பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் செய்தது கார்த்தி சிதம்பரம் மட்டுமல்ல. அவரது தந்தை ப.சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியும் தான். ஆறு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குள் தவறான கருத்துக்களை சிலர் கூறுகின்றனர். மதுவிலக்கு பிரச்சினையில் பெண்களுக்கு…

Read More
1 279 280 281 282 283 425