வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018
இந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன. தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு. பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து. ஆமாம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள்…
Read More









