பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி
அரசியல் பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு மத்திய பாஜகவின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் பழனிசாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களி்ன் முதல்வர்கள் பிரதமரை சந்தித்து பேசிய நிலையில், தமிழக முதல்வரால் தனிப்பட்ட…
Read More








