தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியையும் சேவையையும் கனடா உதயன் குழுமம் வாழ்த்துகின்றது. தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மாநிலத் தலைவர் உயர் திரு கே. பி. அருச்சுணன் அவர்களினதும் ஏனைய அங்கத்தவர்களின் விடா முயற்சியின் பலனாக தமிழ்நாட்டின் ஜவ்வாது மலைப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் நலன் கருதி கோடைகாலப் பயிற்சி இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது. இந்த பயிற்சி முகாமில் சுற்று வட்டார மலைக்கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் பற்றி வைத்தியர் கே. பி. அருச்சுணன் அவர்கள் (ஶ்ரீபுற்று மகரிசி சமூக மருத்துவ சேவா மையத்தின் நிறுவனர்) சிறுவர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றினார். மேலும்…

Read More

பிரசன்னா-சினேகா திரையுலகத் தம்பதி – போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கோடு 20 இலட்சம்

பிரசன்னா-சினேகா திரையுலகத் தம்பதி – போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு உதவும் நோக்கோடு 20 இலட்சம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலுமே வேறு எந்தத் துறையை விட சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர் ஆகியோரே அதிக ஊதியம் பெறுகின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய செய்திக் குறிப்பு ஒன்றில்” எவ்வளவோ சிரமப்பட்டு கல்வி கற்று, பட்டம் பெற்று ஐஏஎஸ் பரீட்சையி சித்திபெற்று கலக்டராகவும் உயர் நிர்வாக அதிகாரிகளாகவும் வருகின்றவர்களை விட கோடிக்கணக்கில் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இந்த நடிக நடிகையர்கள்” என்று.. இவ்வாறு அளவில்லாத செல்வத்தைத் தேடும் சினிமா நடிகர்கள் நடிகைகள் மத்தியில் எத்தனை பேர் தாராள சிந்தையுடன் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் என்பதும் வியப்புக்குரிய கேள்வியே ஆகும். ஒரு தடவை தன்னை சினிமாவிற்கு…

Read More

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட

நடிகர் ராஜ்கிரன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட என்பது திரையுலகம் சார்ந்த அனைவருக்குமே தெரிந்த விடயம். அவர் பணம் சம்பாதிப்பதில் கூட நேர்மையை கடைப்பிடிப்பவர் என்பது செய்திகள் கூடாக நாம் அறிந்து கொண்டவை. ஒரு தடவை அவரிடம் பிரபல வேஸ்டி (வேட்டி) தயாரிக்கும் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் தோன்றி நடிக்கும் படியும் இலட்சக்கணக்கில் ஊதியம் தரலாம் என்றும் வேண்டிக் கொண்டதாம். ஆனால் அதற்கு மறுத்த நடிகர் ராஜ்கிரன், “அநேகமாக வேட்டி அணிபவர்கள் ஏழைகளே! எனக்கு விளம்பரம் செய்வதற்காக நீஙகள் தரும் பணத்தை அந்த ஏழைகளிடமிருந்தே நீங்கள் “கறக்கப்” பார்ப்பீர்கள். எனவே நான் இந்த வேண்டுகோளுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். மேற்படி…

Read More

ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் மீதான எதிர்ப்பு வரை தமிழக அரசியலில் அரங்கேறி வரும் சம்பவங்களின் தொகுப்பு. ஜெயலலிதா மரணம் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஜெ. மறைந்த உடனேயே முதல்வரும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், எந்த சோகமும் இல்லாமல் இயல்பாகப் பதவியேற்றது பலரின் புருவத்தை உயர்த்தியது. அப்போலோ மருத்துவமனைக்கே அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு, ஓபிஎஸ் முதல்வராக உறுதிமொழிக் கடிதம் வாங்கப்பட்டதாகவும்…

Read More

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை

தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 4 மாவட்டங்களுக்கு அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் போராட்டம் இல்லை… இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும்,…

Read More

மகளிர் காங்கிரஸ் போராட்டம்: பிரதமருக்கு வளையல் அனுப்பி ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதா?

மகளிர் காங்கிரஸ் போராட்டம்: பிரதமருக்கு வளையல் அனுப்பி ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதா?

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்து ராணுவ வீரர்களை கொன்று தலை துண்டித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி, அவருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை மகளிர் காங்கிரசார் இன்று (திங்கட்கிழமை) நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– பலம் வாய்ந்த பிரதமர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பலம் இல்லாத பிரதமரை நாடு பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் தற்போது பலம் வாய்ந்த பிரதமரை பெற்று இருக்கிறது. இந்திய ராணுவ…

Read More

மீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்

மீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்

அதிமுக அணிகளை இணைக்கும் முடிவில் இருந்து ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார். இனி இணைப்புக்கு வேலை இல்லை என அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து அடியோடு விலக்கி வைக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளைதான் அதிமுக அணிகள் இணைப்புக்கு பிரதானமாக முன்வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு உறுதி யான பதிலை எடப்பாடி பழனிசாமி அணி இதுவரை அளிக்கவில்லை. மாறாக, ‘ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நீதிமன்ற விசார ணையில் இருப்பதால் இப்போ தைக்கு அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட வர்கள் பேசி வருகின்றனர். ஒருபக்கம் ஓபிஎஸ்…

Read More

60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்

60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்

60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்(கனடா-உதயன் பத்திரிகை ஆசிரியர்)அவர்கள் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செலவத்துடனும் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன்சிறப்புடன் ஶ்ரீவரசித்தி விநாயகர் அருளுடன் வாழ வாழ்த்துகின்றோம்

Read More

அ.தி.மு.க. பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா பேட்டி

அ.தி.மு.க. பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா பேட்டி

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை பயன்படுத்தி பாரதீய ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா கூறினார். வளையல் அனுப்புவோம் காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் 25 மத்திய ஆயுதப்படை வீரர்கள் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர். காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் பிரச்சினைகளில் மத்திய அரசு மக்களை திசைதிருப்ப முயற்சித்து வருகிறது. மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எந்த பிரச்சினையையும் கையாளும் திறன் இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நக்சலைட்டு மற்றும் இந்திய எல்லையில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க தவறியதால் வளையல் அணிந்துகொள்ளும்படி தற்போதைய மந்திரி…

Read More

தமிழகம் முழுவதும் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சிகிச்சை பிரிவு சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அரசு மருத்துவமனையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 படுக்கைகள் கொண்ட ஆண் மற்றும் பெண் பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப்பின் ஆண் மற்றும் பெண் கவனிப்பு பிரிவு மற்றும் 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு மற்றும் கதிர்வீச்சு பிரிவு; தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 90…

Read More
1 349 350 351 352 353 425