சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால் தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் வி.மேகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சீமைக்கருவேல மரம் பல்வேறு நாடு களில் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் ஏராளமாக உள்ளன. வறட்சி பாதித்த பகுதிகளில் இந்த மரங்கள்தான் பசுமைப் போர்வையாக உள்ளன. இந்த மரங்கள் கரித்தூள், எரிபொருள், காகிதம், அட்டை போன்ற பொருட்களை தயாரிப் பதற்கும், காற்றின் வேகத்தைக் குறைப் பதற்கும், வேலி அமைப்பதற்கும், சில விலங்குகளின் உணவாகவும்…
Read More









