நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மின்வெட்டு தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1,065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்திவிட்டது. சென்னையில்…

Read More

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஈழத் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுப்பவர் மற்றும் உலகக் கவிஞர்கள் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா. கனடாவின் ஸ்காபுறோநகரில் 876 Markham Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Fabian’s Cafe’ உணவகத்தின் கூட்டமண்டபத்தில் எதிர்வரும் 30-04-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேற்படி நூல்களின் அறிமுக விழா நடைபெறும். அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள அறிஞரின் நூல்கள் பின்வருமாறு:- சேதுகாப்பியம் 8ம் காண்டம், யேசுஅந்தாதி, தமிழ்ப் பணியில்…

Read More

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் சூடப்பட்டதால்,சுமந்திரன் தொடர்ந்தும் ஜனாதிபதி“பக்கம்”தானா?

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் சூடப்பட்டதால்,சுமந்திரன் தொடர்ந்தும் ஜனாதிபதி“பக்கம்”தானா?

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் என்ற மூன்று வகையினருக்கும் வாழ்க்கைப் பிரச்சனை என்பதே இல்லை. அவர்களது பதவி, பணம், அதிகாரம், சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு சுகபோக வாழ்வையே தொடர்ந்தும் தந்தவண்ணம் இருப்பன. ஆனால் இங்கே நாம் குறிப்பிடாத ஏனைய மக்கள் தொழிலாளர்கள் விவசாயக் கூலிகள், இடைத்தர அல்லது கனிஸ்ட தர அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்குமே தங்கள் குடும்பங்களின் சுமை அவர்களை சின்னாப்பின்னப் படுத்திய வண்ணமே இருக்கும் என்பது நிச்சயம். மறு பக்கத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணமற்போன உறவுகளை இழந்து தவிக்கும் அவர்களைப் பெற்றவர்கள், மணம் முடித்தவர்கள் என்ற உறவுநிலையை உடையவர்கள், தங்கள் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளமையால் வாழ்க்கையும்…

Read More

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

கனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95வது வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்

Read More

கொடநாடு காவலாளி கொலை: உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு காவலாளி கொலை: உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு பங்களாக காவலாளி கொலை தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாக காவலாளி ஓம்பகதூர் என்பவர் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. குறிப்பாக அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதா பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில்…

Read More

அரசு ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சு நடத்திய பின் ஊழியர் சங்கம் அறிவிப்பு

அரசு ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சு நடத்திய பின் ஊழியர் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு அளித்த உறுதியை தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போராட்டத்தை யொட்டி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன….

Read More

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் – தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் – தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து அமைத்துள்ள இந்த அனல் மின் நிலையம் 3 அலகுகள் கொண்டது. இங்கு கிடைக்கும் 1,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தியில், தமிழகத்தின் பங்காக 1066.95 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வல்லூர் அனல் மின் நிலையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தமிழகத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்ததற்காக, தேசிய அனல்மின் கழகத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்…

Read More

டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விசாரணை இந்த வழக்கில் முதலில் கடந்த 16–ந் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள்…

Read More

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.அலுவலகமும் இங்கு தான் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு உள்ளனர். போலீஸ் காவலையும் மீறி மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைத்துவிடலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தப்பு கணக்கு போட்டால் பகல் கனவாக முடியும்

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைத்துவிடலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தப்பு கணக்கு போட்டால் பகல் கனவாக முடியும்

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக விவசாயிகளின் 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.மு.க. மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் உதவாத வாதங்களை அடுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். காவிரிக்காக என்ன செய்தது தி.மு.க. என்று அரசியல் அரிச்சுவடி தெரியாதது போல் கேள்வி எழுப்புகிறார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, காவிரி இறுதி தீர்ப்பை பெற்றது, அந்த தீர்ப்பை…

Read More
1 353 354 355 356 357 425