இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன்- சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு- குரல் மாதிரி சோதனை நடத்த முடிவு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவை டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்துள்ளனர். அதிமுக துணை பொதுச் செய லாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல்…
Read More









