மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்

மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார்  இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியையும் பின்னர்  கனடா மொன்றியாலையும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று சிவனடிசேர்ந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீமான் நாகலிங்கம் செல்லாச்சிதம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினி (அகரம் தமிழ் வானொலி- மொன்றியால்), அவர்களின் அன்புத் தந்தையாரும் ரஞ்சன்(அகரம் தமிழ் வானொலி-மொன்றியால்),அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் மறைவையொட்டிகனடாஉதயன் நிறுவனம் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு :- ரஞ்சன், ரஞ்சினி14388766527

Read More

உத்தரவிட்ட மோடி; நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

உத்தரவிட்ட மோடி; நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட வேண்டும் என்ற மோடி அமைச்சரவையின் முடிவையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாகப் பேசும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, நான் பயணம் செய்யும் காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளேன். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில் அவர் சிவப்பு வண்ண சுழல் விளக்குகளைப் பயன்படுத்தியது கிடையாது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்கை அகற்ற பிரதமர்…

Read More

இந்த வார (21/04/2017) இ-பேப்பர்

இந்த வார (21/04/2017) இ-பேப்பர்

இந்த வார (21/04/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

இரட்டை இலை சின்னத்தை  பெறுவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் வழங்க டெல்லி போலீசார் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்கள் இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட்நகரில்  உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். திடீரென்று மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு  போலீசார் ரவிச்சந்திரனை  மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து…

Read More

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதை ஏற்று அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்குவதாக தினகரனும் அறிவித்து இருக்கிறார். இணைப்பு முயற்சி இதைத்தொடர்ந்து பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வை இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா…

Read More

தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்

தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்

கடந்தவாரம் எமதுகதிரோட்டம் உலகெங்கும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைச் சென்றடைந்தது என்பதற்குச் சான்றாக பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவற்றை நாம் எமக்குக் கிடைத்த பாராட்டுக்களாக நாம் பார்க்கவில்லை. மாறாக ஒரு சமூகக்கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஒரு தர்ம கைங்கரியத்தில் அவ்வாறான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும். கடந்த வாரத்தின் எமது கதிரோட்டத்தின் தலைப்பு “தனிநபர்களிடம் தங்கியுள்ளநிதிதாயகம் நோக்கிவிரியவேண்டும்”என்பதே. இந்தஆசிரிய தலையங்கத்தைப் படித்துவிட்டு பலர் மௌனமாகவே உள்ளார்கள். சிலர் நினைக்கலாம் “இது மிகவும் கடினமான வேலை”என்று. இன்னும் ஒருசாரார் நினைக்கலாம் “இது எமக்கு வேண்டாத வேலை” என்று….

Read More

நாளை நடைபெறும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

நாளை நடைபெறும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

பிரித்தானியாவாழ் வழக்கறிஞரும் எழுத்தாளருமான செல்லத்தம்பி ஸ்ரீ ஸ்கந்தராசாஅவர்கள் எழுதிய “இனிக்காதா இலக்கணம்” , “ஆங்கிலம் பிறந்தகதையும் வளர்ந்த கதையும்”, “பேசாதவைபேசியவை”, “ஆங்கிலம் மூலம் தமிழ்”, மற்றும் The Deserted Wife and the Dancing Girl’s Daughter ஆகியஐந்துநூல்களின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்காபுறோ நகர சபைமண்டபத்தில் நடைபெறும். விழாவிற்கு கனடாதமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் தலைமை தாங்குவார்.

Read More

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்.ஜி.ஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததில் தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி. தர்ம யுத்தம் தொடரும். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

Read More

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் நேற்றே ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் நானே அறிவித்திருப்பேன். கடந்த 14-ம் தேதி வரை அமைச்சர்கள் என்னை சந்தித்துவந்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் பேசினர். திடீரென்று அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கப்பார்க்கிறார்கள். அவர்களது அச்சத்துக்கு என்ன காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என்னை நீக்கினால்தான் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்மை கிடைக்குமென்றாம் அந்த நன்மை அவர்களுக்கு…

Read More

தினகரனை தவிர்த்துவிட்டு அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை: அதிமுகவுக்குள் மீண்டும் அசாதாரண சூழல்

தினகரனை தவிர்த்துவிட்டு அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை: அதிமுகவுக்குள் மீண்டும் அசாதாரண சூழல்

தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக அதிமுகவுக்குள் எதுவும் நடக்காது என்கிறார்கள். ஆனால், தற்போது கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள். ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதாகவே இல்லாவிட்டாலும் யாரும் எதிர்க் கேள்வி கேட்டதில்லை; கேட்கவும் முடியாது. ஆனால், இப்போது அந்தக் கட்சியில் ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்கிறார்கள், ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர நினைத் தது சசிகலா குடும்பம். அந்த நேரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி தூக்கினார். சசிகலா குடும்பத்தின் மீதிருந்த வெறுப்பு காரணமாக…

Read More
1 356 357 358 359 360 425