இரட்டை இலை சின்னம் விவகாரம்: 8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம்: 8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி, தேர்தல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்துப் பேசியது. இறுதியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கி…

Read More

தமிழில் கைவிடப்பட்டது ‘குயின்’ ரீமேக்

தமிழில் கைவிடப்பட்டது ‘குயின்’ ரீமேக்

தமிழில் தமன்னா நடிப்பில் உருவாகவிருந்த ‘குயின்’ ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். ‘குயின்’ தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது. இந்நிலையில், “இப்படம் கைவிடப்பட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை….

Read More

சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 13) இரவு 7 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படத்தின் டிரைலர் ஓரளவுக்கு…

Read More

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஜுன் 23ல் வெளியிட திட்டம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’  ஜுன் 23ல் வெளியிட திட்டம்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கவுதம் மேனன். ஒன்றாக எண்டர்டையின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கவனம் செலுத்தத் துவங்கினார் கவுதம் மேனன். தனுஷுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கியை அளித்தால் மட்டுமே, மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அவருக்கு…

Read More

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்பது வதந்தியே: டிடிவி தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்பது வதந்தியே: டிடிவி தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறுவது வதந்தியே என்று அதிமுக(அம்மா) கட்சியின் துணை பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று சென்ற அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: ”வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அது வதந்தியே. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவில்லை. விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் எப்போது ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்? ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடந்தால் நான்தான் வேட்பாளர்” என்று டிடிவி தினகரன்…

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு; இயக்குநர் கவுதமன் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு; இயக்குநர் கவுதமன் கைது

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண் சோறு, நிர்வாணப் போராட்டம் என பல்வேறு கடுமையான போராட்டங்களை…

Read More

14-ல் களமிறங்குகிறார் கோலி?

14-ல் களமிறங்குகிறார் கோலி?

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு அணி யின் கேப்டனாக உள்ள விராட் கோலி வரும் 14-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என தெரிகிறது. இந்திய அணியின் கேப்ட னான விராட் கோலி, ஆஸ்திரே லியாவுக்கு எதிரான ராஞ்சி யில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை யில் காயம் அடைந்தார். இதனால் தர்மசலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் விளை யாடாத அவர் ஐபிஎல் தொடரின் இரு ஆட்டங்களிலும் பங்கேற்க வில்லை. இந்நிலையில் கோலி, உடற் பயிற்சி கூடத்தில் பயிற்சிகள் செய்யும் வீடியோவை இன்ஸ் டாகிராமில் பதிவேற்றம் செய் துள்ளார். அதில், கோலி பளுதூக் குதல்,…

Read More

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து திமுக எம்.பிக்கள் புகார்

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து திமுக எம்.பிக்கள் புகார்

திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு மூன்று முக்கிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 30 நாள்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் தி.மு.க எம்பி-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

Read More

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? – வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? – வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது, கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததையொட்டி வாக்காளர் களுக்கு சிலர் பணம் கொடுத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை தெரிவித் துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் சில அமைச்சர்கள் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு இடையூறு செய்ததாக…

Read More

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம். இன்று வருமான வரித் துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி அபரிமிதமானது. புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் கிராமத்தில் பிறந்தவர் விஜயபாஸ்கர். இவரின் தந்தை…

Read More
1 360 361 362 363 364 425