பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான…

Read More

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்: பிரதமரை சந்திக்க முடியாததால் விரக்தியடைந்ததாக அய்யாக்கண்ணு விளக்கம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்: பிரதமரை சந்திக்க முடியாததால் விரக்தியடைந்ததாக அய்யாக்கண்ணு விளக்கம்

டெல்லியில் 28-வது நாளாக போராடிவரும் தமிழக விவசாயிகள் இன்று (திங்கள்கிழமை) ராஜ்பாத் சாலையில் நிர்வாணப் போராட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்தர மோடியை சந்திக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றியதால் நிர்வாணப் போராட்டம் நடத்தியதாக போராட்டக்குழுவின் தலைவர் பி.அய்யாகண்ணு விளக்கமளித்தார். டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28 ஆம் நாளான இன்று அவர்களில் 8 பேரை பிரதமரிடம் சந்திக்க வைப்பதாகக் கூறி மந்திர் மார்க் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். இதற்காக அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் இருந்து எட்டு பேரும் பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவுடன் ஆவலாகச் சென்றனர். அங்கு பிரதமரின் அலுவலகத்தில்…

Read More

சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்: பேருந்து, கார் சிக்கியதால் பரபரப்பு

சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்: பேருந்து, கார் சிக்கியதால் பரபரப்பு

மெட்ரோ ரயில் பணிகளால் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே திடீரென ஏற்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் மாநகர பஸ்ஸும், காரும் நேற்று சிக்கின. இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்படைந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணிகளின்போது சில இடங்களில் சுரங்கப்பாதையில் இருந்து சிமென்ட் கலவை வெறியேறுவது, திடீரென பள்ளம் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டுமே அண்ணா சாலையில் 3 சம்பவங்கள் நடந்துள் ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அருகே திடீரென சிமென்ட் கலவை வெளியேறியது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் அண்ணா சதுக்கத்தில் இருந்து 25ஜி மாநகர பஸ் சென்று கொண்…

Read More

நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்

நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை…

Read More

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி…

Read More

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு  யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும், இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும் 2017 ஆவணி மாதம் 5ம் 6ம் நாள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2048 திருவள்ளுவராண்டு) இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற உள்ளது. உலகத்…

Read More

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக மக்களை மறந்து விடாமல் அவர்களுக்காய் இலக்கியத்தையும் இசையையும் எண்ணஙகளையும் எப்போதும் ஓடவிடும் இதயம் கொண்டவர். சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், பேச்சாளர், உலகெங்கும் கலை இலககிய நண்பர்களை தனது சொத்தாகவும் சொந்தங்களளாகவும் பேணி வாழ்ந்து வருபவர். இவர்தான் கலைஞர் கோவிலூர் செல்வராஜன் . இந்த அற்புதக் கலைஞருக்கு சர்வதேச சிறப்பு விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்தது எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனம். மேற்படி விருதினைப் பெறுவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கனடாவிற்கு வருகை தந்த அவர் இங்கு அவர் எழுதிய சிறுகதைகளின்…

Read More

இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடவாடித்தனங்கள், அடக்கு முறைகள் இனவாத அல்லது மதவாதப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கபபட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. அந்தளவிற்கு எத்தனையோ ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில இந்த அனர்த்தஙகளும் அடக்குமுறைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற “.இறுதி யுத்தத்தின்” போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட அரச படைகளின் மோசமான நடவடிக்கைகள் அங்கு யுத்த வடுக்களை ஏற்படுத்தின. அந்த நாட்களில் இடம்பெற்ற அரசபடைகளின் போர்க்குற்றங்கள் மறைவான இடங்களில் கொல்லப்பட்டவர்களின் முன்பாக நடந்தபடியால் அவை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது. களத்தில் நின்ற போராளிகள் கூட எவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொல்லபபட்டார்கள என்பதை அவர்களை வழிநடத்திய தளபதிகள் கூட அறிந்திருகக வாயப்பிருக்கவில்லை….

Read More

Strokes; Not Just For the Elderly

Strokes; Not Just For the Elderly

How could it happen to Kris Letang,the Pittsburgh Penguin hockey player? Hewas young, in excellent physical condition, yet a victim of stroke. Today, stroke is not just a senior problem. So, why don’t learned professors know why this is happening? Professor Valery Feigin is Director of the National Institute for Stroke and Applied Neurosciences at Auckland University, in New Zealand. He reports in the  journal, The Lancet, that every year over 80,000 children and youth…

Read More

எழுப்பூர் விடுதியில் வருமான வரிசோதனையில் ரூ.5000 பரிசுப்பொருள் டோக்கன்கள் 850 பறிமுதல்!

எழுப்பூர் விடுதியில் வருமான வரிசோதனையில் ரூ.5000 பரிசுப்பொருள் டோக்கன்கள் 850 பறிமுதல்!

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி கள் அந்த லாட்ஜில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்ற போது அ.தி.மு.க. வினர் பலர் லாட்ஜில் இருந்து வெளியேறினர். ஆனால் யாரையும் வெளியில் விடாமல் சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர் அவர்களின் கார்களில் சோதனை நடத்தினர். இருக்கைகள் அனைத்தையும் தூக்கி பார்த்து பணம் எதுவும்…

Read More
1 362 363 364 365 366 425