50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி பறிமுதல்

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி கள் அந்த லாட்ஜில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்ற போது அ.தி.மு.க. வினர் பலர் லாட்ஜில் இருந்து வெளியேறினர். ஆனால் யாரையும் வெளியில் விடாமல் சுற்றி வளைத்த வருமானவரித்துறையினர் அவர்களின் கார்களில் சோதனை நடத்தினர். இருக்கைகள் அனைத்தையும் தூக்கி பார்த்து பணம் எதுவும் பதுக்கி…

Read More

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 30…

Read More

1,330 குறட்பாக்களுக்கும் கருத்தோவியம் தீட்டிய மாணவி

1,330 குறட்பாக்களுக்கும் கருத்தோவியம் தீட்டிய மாணவி

திருக்குறளை மாணவர்கள் எளிதாக புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, 1,330 குறட்பாக்களுக்கு பொருள் விளக்கம் தரும் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமசவுந்தரி. விருதுநகர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த சேர்மநாதனின் மகள் ஹேமசவுந்தரி (23). மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள ஹேமசவுந்தரி, பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளில் ஈடுபாடு கொண்ட இவர், 133 அதிகாரங்களின் தலைப்புகளுக்கு ஏற்ப அதன் பொருளை உணர்த்தும் வகையில் 133 ஓவியங்களை கடந்த 3…

Read More

ஆர்.கே.நகரில் வீடு, வீடாக வினியோகம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது

ஆர்.கே.நகரில் வீடு, வீடாக வினியோகம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பண மழையில் வாக்காளர்கள் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகின்றனர். அங்கு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்த புகாரில் அ.தி.மு.க. அம்மா கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.15 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர், சிவகாமி நகர், இந்திராநகர், சிவன் நகர் மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜிநகர், பாரதி நகர் உள்பட இடங்களில்…

Read More

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் இருக்கிறார். மேலும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களிலும்…

Read More

வருமான வரிசோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம் போலீசாரை தள்ளியதால் பரபரப்பு

வருமான வரிசோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம் போலீசாரை தள்ளியதால் பரபரப்பு

விஜயபாஸ்கர் வீட்டில் பரபரப்பு . பாதுகாப்பு படையினரும், வருமானவரித்துறையினரும் அத்துமீறுகின்றனர் என அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள்…

Read More

வருமான வரித்துறை சோதனை தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா?

வருமான வரித்துறை சோதனை தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை பல்வேறு வகையில் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்களை குவித்த வண்ணம் உள்ளன. வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அனைத்து கட்சியினருமே புகார் கூறியுள்ளன. ஆனால் இந்த புகார்களை டி.டி.வி. தினகரன் மறுத்தார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்தே பல நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இருப்பினும் பணப்பட்டுவாடா கட்டுப்படுத்த முடியவில்லை என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு தொடர்ந்தது. பணம் பட்டுவாடா புகரை அடுத்து தலைமை தேர்தல் கமிஷன்…

Read More

டெல்லியில் இன்று இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு

டெல்லியில் இன்று இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவா தலைநகர் பனாஜிக்கு செல்லவிருந்த “Delhi-Goa AI156” ஏர் இந்தியா விமானம் இன்று காலை 11.15 மணியளவில் 28-வது ஓடுபாதை வழியாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே ஓடுபாதையில் ராஞ்சியில் இருந்து வந்த இன்டிகோ விமானமும் எதிர் திசையில் தரையிறங்கியது. நல்லவேளையாக கோவா புறப்பட்டு சென்ற விமானத்தின் விமானி இதை கவனித்து விட்டார். இதையடுத்து, வேகத்தை குறைத்து தரையிறங்கும் ஏர் இன்டிகோ விமானத்துக்கு அவர் வழி ஒதுக்கி தந்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இதைப் பார்த்த அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதனால், இரு விமானங்களும் நேருக்கு நேராக மோதவிருந்த பெரும்…

Read More

இந்த வார (07/04/2017) இ-பேப்பர்

இந்த வார (07/04/2017) இ-பேப்பர்

இந்த வார (07/04/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். தோனி முதன்முறையாக கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 4 ஓவர்களில் மும்பை அணி 41 ரன்கள் குவித்த நிலையில் இம்ரன் தகிர் வீசிய 5-வது ஓவரில்…

Read More
1 363 364 365 366 367 425