ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையைப் பெற்றிடுவோம்: மாஃபா பாண்டியராஜன்

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையைப் பெற்றிடுவோம்: மாஃபா பாண்டியராஜன்

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம் என்று ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கே.பாண்டியராஜன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான நீதி விசாரணை வெற்றி பெற்ற ஒருவாரத்தில் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் இல்லம் புனித நினைவு இல்லமாக மாற்றப்படும். ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம். இந்த வாக்குறுதிகள் ஆர்.கே.நகருக்கு மட்டுமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவானவை. மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் இங்கு கொண்டுவரப்படுகிறது. மக்களை தேடி எம்எல்ஏ என்ற அடிப்படையில். வெற்றி பெற்ற 100 நாட்களில் இந்த சேவை தொடங்கப்படும்….

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 இளைஞர்கள் மீது மெரினா போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இளைஞர் மற்றும் மாணவர் அமைப் பினரும் விவசாயிகளின் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என் பதையும் வலியுறுத்தி 29 இளை ஞர்கள் மெரினா கடற்கரையில் நேற்று…

Read More

வருமானவரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

வருமானவரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக பதவி வகித்தவர் ராமமோகனராவ். அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமானவரி துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து ராமமோகன ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக எந்த பதவியிலும் இல்லாமல் இருந்த ராமமோகனராவ் தற்போது புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை…

Read More

இந்த வார (31/03/2017) இ-பேப்பர்

இந்த வார (31/03/2017) இ-பேப்பர்

இந்த வார (31/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்தேக மரணத்துக்கு நீதி… விழாவை தொடர்ந்து ஜெ.தீபா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஜெயலலிதாவின் சந்தேக மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தீர்ப்பு அமையும். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவின் பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என நம்புகிறேன். டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது அனைவருக்கும்…

Read More

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Read More

நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில்  108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டார். * இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் *  ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும் * நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் செயல்படுத்தப்படும்* ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை * எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். * ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை*ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலக தரத்துக்கு மாற்றப்படும் * அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி…

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடி போராட போவதாக தகவல் வெளியானதை அடுத்து அதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். …

Read More

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 15-வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினரை புதுச்சேரி மாநில முதல் மந்திரி வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை மந்திரி சுனில் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்தித்தனர்….

Read More

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்தியாவிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரியே தி.மு.க.தான். எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார். அப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான்…

Read More
1 367 368 369 370 371 425