பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்

புதுச்சேரியில் மாட்டு வண்டியில் அமர்ந்து முதல்வர், அமைச்சர். ஆகியோர் ஊர்வலமாக வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் செயல்பாட்டின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையின் அருகில் துவங்கியது. துவக்கத்திலேயே மாட்டு வண்டியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்து வந்தனர். மொத்தம் 8 மாட்டு வண்டிகள் அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வரும் மத்திய…

Read More

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறை சில்லறையாக குறைக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து திரிசூலத்துக்குப் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ’மதுரைக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்கு பதில், நான் ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றேன்’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின்…

Read More

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், வரும் ஜனவரி 28-ம் தேதி நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பத்து இலட்சம் ஏக்கரில்…

Read More

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டில் ரஜினிகாந்த் தனிக்கட்சி? பரபரப்பு தகவல்

ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டில் ரஜினிகாந்த் தனிக்கட்சி? பரபரப்பு தகவல்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இறுதியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். கட்சி பெயரை அறிவிக்காமல் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் பெயரிலேயே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கட்சியை எப்போது அறிவிப்பார் என்று ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். இதனால் கட்சி பெயரை அறிவிப்பதில் அவர் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. 2 கோடி உறுப்பினர்கள் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பு 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து அடித்தளத்தை வலுவாக்குவது ரஜினிகாந்தின் திட்டமாக உள்ளது என்று நெருக்கமானவர்கள்…

Read More

கமலுக்கு வரலாறு தெரியாது: ஜெயகுமார்

கமலுக்கு வரலாறு தெரியாது: ஜெயகுமார்

சென்னை : ”தமிழகத்தில், 2001 முதல் அனைத்து துறைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.நடிகர் கமலுக்கு, வரலாறு தெரியவில்லை என்றால், என்னிடம் போனில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்,” என,மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயகுமார் கூறினார். சமூகநலத்துறை சார்பில், சென்னை, தி.நகரில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், சென்னையில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த, 500 கர்ப்பிணி பெண்களுக்கு,ஜாதி மத பேதமின்றி, ஒன்றாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவும், சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய பைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்,மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், சமூகநலத்துறை அமைச்சர், சரோஜா, கலெக்டர், அன்புசெல்வன்ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:தமிழகத்தில், வெளிப்படையான அரசு நடந்து…

Read More

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது – தினகரன்

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது – தினகரன்

ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது: பேருந்து கட்டணத்தை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம், அரசு அதனை நிறைவேற்ற வேண்டும். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ரஜினி, கமல் புதிய கட்சி தொடங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Read More

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது

தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான பயங்கரவாதி அப்துல் சப்ஹான் குரோஷி டில்லியில் கைது

கடந்த 2008-ம் ஆண்டு குஜராத்தி்ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இதற்கு சதி திட்டம் தீட்டியவனும் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மென்பொறியாளர் அப்துல் சப்ஹான் குரோஷி ,இவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் டில்லி காஸிப்பூரில் பதுங்கியிருந்ததையறிந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில் குரோஹி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி, இந்தியான் முஜாகிதீன் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. கைதான குரோஷியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி…

Read More

தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்

தி.மு.க. பிரபலங்கள்: தடைகளை தாண்டியது ராஜா புத்தகம்

தி.மு.க., தலைமையுடனான கடும் போராட்டத்துக்கு பின், சில முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ள, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த, ராஜாவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரபலங்கள் டில்லிக்கு வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையான பின், தி.மு.க., தலைவர் கருணா நிதிக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தனித் தனியாக கடிதங்கள் எழுதினார். மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது: குற்றமற்றவன் என பலமுறை கூறியும், என்னை நீங்கள் காப்பாற்றவில்லை. சில நிர்ப்பந்தங்களுக்காக, நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. இன்று நான் நிரபராதி. உங்கள் அமைச்சக சகாக்கள் சிலரைப் போல அல்ல நான். எப்போதும் தங்கள் விசுவாசிதான். இத்தனை…

Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ரூ.1.5 கோடி பரிசு மழை: சீறிப் பாய்ந்த காளைகளை போராடி அடக்கிய வீரர்கள்- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ரூ.1.5 கோடி பரிசு மழை: சீறிப் பாய்ந்த காளைகளை போராடி அடக்கிய வீரர்கள்- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட முரட்டுக் காளைகள், எதிர்த்து நின்று மல்லுக்கட்டிய வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. அதுபோல் சீறிப் பாய்ந்து வந்த பல காளைகளை வீரர்கள் பலர் திறமையாக பிடித்து அடக்கி சாகசம் செய்தனர். ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வரும், துணை முதல்வரும் கார்களை பரிசாக வழங்கினர். தைத்திருநாளில் மதுரை அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங் கல் அன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெறும். நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான நாளில் சிறப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் கமிட்டி மற்றும்…

Read More

ஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?- வைகோ விளக்கம்

ஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?- வைகோ விளக்கம்

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மத அடிப்படையில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த…

Read More
1 119 120 121 122 123 181