ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்

முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் இட்லி சாப்பிட்ட தாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன. இதன்…

Read More

செந்தில் பாலாஜி உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜி உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் தினகரன் அணியின் ஆதரவாளர்களில் ஒருவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராம் நகர், ராமகிருஷ்ணா நகர், தான் தோன்றி மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. கோவையிலிருந்து இணை இயக்குநர் தலைமையில் சென்ற வருமான வரித்துறையினர் அவரது நண்பர்கள் என்று கூறப்படும் சுவாமிநாதன், சுப்ரமணி, சாரணி…

Read More

செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று

செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று

ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான். செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்படாத நிலை வந்த போதும் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போதெல்லாம் உடல் சோர்வை மறைத்துக்கொண்டு புன்னகை தவழும் முகத்துடன் தொண்டர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துவார். கடைசி நாளன்று தனது வாகனத்தை விட்டு மெதுவாக இறங்கி…

Read More

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பிரச்சினையில் மத்திய பாஜக அரசை குறைசொல்லும் ஸ்டாலின், மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை? சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்குப் பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கினார் அன்றைய திமுக முதல்வர் கருணாநிதி. நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது…

Read More

ஈபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்: தினகரன்

ஈபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்: தினகரன்

அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லாது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், இரட்டை இலையை மீட்பது மற்றும் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அவ்வாறு இல்லை என்றால் துணை பொதுச் செயாலாளர் நான்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும்….

Read More

தமிழக அமைச்சரின் பணமா? – ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்

தமிழக அமைச்சரின் பணமா? – ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்

பினாமி பெயரில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர், தாமாக முன்வந்து கறுப்பு பணம் கணக்கு காட்டும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது. 50 சதவீதம் அபராதம் இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில்…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு?

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு?

எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் உள்ளிட்ட சிக்கல்களுக்கிடையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர். சமீபத்தில் தினகரன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குழுவினர் சந்தித்தனர். அப்போது, எம்எல்ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியதாக தினகரன் தெரிவித்தார். ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க…

Read More

சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்

சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 போலீஸாரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தனர். “டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 நாட்களில் சென்னையில் 100 சதவீதம் முழுமையாக தடுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (புதன்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல் ஆணையர். ஏ.கே.விஸ்வநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். வேண்டிய மருத்துவ உதவிகள் கிடைப்பது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர்…

Read More

மொத்தமுள்ள 2,236 பேரில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானங்களுக்கு ஆதரவு: சசிகலா பதவியை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு – முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக அதிகாரங்கள்

மொத்தமுள்ள 2,236 பேரில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானங்களுக்கு ஆதரவு: சசிகலா பதவியை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு – முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக அதிகாரங்கள்

அதிமுகவில் சசிகலா வகித்து வந்த தற்காலிக பொதுச்செயலாளர் பதவியையும், அவர் அறிவித்த நியமனங்களையும் ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 2,236 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானத்தை ஆதரித்தனர். கட்சியில் பொதுச்செயலாளர் பதவியே ரத்து செய்யப்பட்டு, அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளன. 12 தீர்மானங்கள் அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெருமையும், கம்பீரமும் மறைந்த ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என…

Read More

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் வர தொடங்கினர்கள். பொதுக்கூழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள…

Read More
1 131 132 133 134 135 181