தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பதவியைத் துறந்துள்ளார்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பதவியைத் துறந்துள்ளார்

தற்போது இந்தியா முழுவதும் “நீட்” என்னும் கல்வித் திட்டம் தொடர்பாக எங்கும் ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கையில், இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமுல்படுத்தும் படி வலியுறுத்தி போராடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பதவியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பணியைத் துறந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டும் ஆசிரிய பணிக்கு முன் உதாரணமாக விளங்கி கொண்டு இருக்கிறார்

Read More

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் படுகொலை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீமான்

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் படுகொலை தொடர்பாக கண்டனம்  தெரிவித்துள்ள சீமான்

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:- “பெருமதிப்பிற்குரிய கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி இந்தியப்பெருநிலத்தின் அறிவுச்சமூகத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தனது கருத்துகளைத் துணிவோடு வெளிப்படுத்திக் கொண்டிருந்த முற்போக்காளர் கவுரியின் மரணம் இந்திய நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டது. பேராற்றலும், நெஞ்சுரமும், நம்பிக்கையும் நிறைந்த பெண்ணாக வாழ்ந்து, எதற்கும் அஞ்சாமல் மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் எளிய மக்களின் மனசாட்சியின் குரலாக மதிப்புமிகு கவுரி லங்கேஸ் திகழ்ந்தார்….

Read More

ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: தினகரனுடன் கூட்டம் நடத்த திட்டம்

ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: தினகரனுடன் கூட்டம் நடத்த திட்டம்

தொகுதிக்கும், சென்னைக்கும் சென்றிருந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று மாலை முதல் புதுச்சேரிக்கு மீண்டும் திரும்ப தொடங்கினர். இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். சனிக்கிழமையன்று தினகரன் புதுச்சேரி வந்து சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். இந்நிலையில் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தங்களுடைய தொகுதி பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ள அவர்களில் பலர் மாலை…

Read More

சென்னையில் இன்று முரசொலி பவள விழா : 11 ஆண்டுக்குப் பிறகு திமுக மேடையேறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ – கூட்டணியில் இணைவாரா?

சென்னையில் இன்று முரசொலி பவள விழா : 11 ஆண்டுக்குப் பிறகு திமுக மேடையேறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ – கூட்டணியில் இணைவாரா?

கடந்த 2006-ல் திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், பலத்த மழை பெய்ததால் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை (செப்டம்பர் 5) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில்…

Read More

சசிகலா ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது: பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை

சசிகலா ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது: பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை

திமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வமும், அவரைச் சார்ந்தவர்களும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கும் எண்ணத்துடன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இ.மதுசூதனன், எஸ்.செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 23-ம் தேதி அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும்…

Read More

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என்று வேண்டு கோளும் விடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இரங்கல் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.7 லட்சம் நிவாரணம் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து…

Read More

மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்

மாணவி அனிதா தற்கொலை தமிழகம் முழுவதும் போராட்டம்-மறியல்

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர்.உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிச் சென்று மோடியின் உருவ பொம்மையை பறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (தேசிய மாணவர் இயக்கம்) சார்பில் கோவை ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை…

Read More

‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’: ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’: ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தகவல்

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியபோது ‘தற்போதைய சூழலில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது’ என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன் கூறினார். முன்னதாக இன்று (ஆகஸ்ட் 30) காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். பின்னர் நால்வரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி முதல்வர் எடப்பாடி…

Read More

ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை

ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை

சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பென்ஜமின், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– கொடுப்பது என்பது எம்.ஜி.ஆரின் பிறவிக்குணம். அந்த வள்ளலின் வாரிசு தான் ஜெயலலிதா. இந்தியா, சீனா யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். யுத்த நிதி திரட்டுவதற்காக சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார். ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். அந்த நேரத்தில்…

Read More

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

கட்சிக்கு துரோகம் செய்தவர்களை விட மாட்டோம். ‘ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் மேலும் சில எம்எல்ஏ.,க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் அணிக்கு இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா? இன்னும் வருவார்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வர உள்ளனர். மத்திய அமைச்சர்களை அதிமுக அணியினர் சென்று சந்தித்து வருகிறார்களே? டெல்லி சென்று அவர்களை சந்திக்கின்ற முதல்வர், துணை முதல்வருக்கு தவறான ஆலோசனையை மத்திய அரசு கொடுக்கிறது. அதிமுக பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பயன்படுத்துகிறார்கள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரால்…

Read More
1 132 133 134 135 136 181