ஓ.பி.எஸ். அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேற திட்டம்?

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேற திட்டம்?

ஓ.பி.எஸ். அணிக்கு 11 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று அந்த அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இது ஓ.பி.எஸ். அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இதற்கிடையில் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். இந்த நெருக்கடி பற்றி ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து மேலும் 4 பேர் வெளியேற முடிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரான முன்னணி எம்.எல்.ஏ., மற்றும் ஒரு பெண் எம்.எல்.ஏ….

Read More

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த இடம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுப்புராஜ் கிணற்றை வழங்க முடியாது. வேண்டுமானால் 20 செண்ட் நிலத்தை மட்டும் தருகிறேன். அதில் கிணறு வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள்…

Read More

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து

நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து

கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹெகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி அவரது கையை குழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள்,…

Read More

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா தோழி சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி முதலாவதாக வந்து இணைந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ‘தனது தொகுதியான கவுண்டம்பாளையத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்களுக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார். இதையடுத்து அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் தனது சொந்த ஊரான சேலம்…

Read More

சிறை முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டு சிறை தண்டனை: முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி

சிறை முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டு சிறை தண்டனை: முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி

பெங்களூரு சிறையில் விதிமுறை களை சசிகலா மீறியதாக எழுந்திருக்கும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் டிஐஜி ரூபா டி.மவுட்கில் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் தெரிவித்தார். சிறை அதிகாரியின் காரில் சசிகலா ரகசியமாக வெளியில் சென்று வரும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகியது. இந்த விவகாரம் பெரும்…

Read More

அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவிடத்தை திறக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ல் ராமேசுவரம் வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேக்கரும்பில் தென் மண்டல ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில் லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அவரது உடல் கலாமின் பிறந்த ஊரான ராமேசுவரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக் கம் செய்யப்பட்டது. பின்னர், பேக்கரும்பில் மணி மண்டபம் கட்டப்படும் என 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கலாமின்…

Read More

மக்களை தூண்டிவிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை

மக்களை தூண்டிவிட்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் எச்சரிக்கை

மக்களை தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று முதல்வர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பொது, நிதி உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மத்திய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? முதல்வர் கே.பழனிசாமி: குண் டர் சட்டத்தில் கைது செய்யப் பட்ட வளர்மதி மீது 6 வழக்கு கள் இருக்கின்றன. நெடுவாசல்…

Read More

எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?

எந்த சேவையும் செய்யாமல் கமல்ஹாசன் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்?

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன சேவை செய்தார்கள்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளனர். எந்த சேவையும் செய்யாமல் இருந்த கமல்ஹாசனுக்கு திடீரென்று ஞானோதயம் வருவது ஏன்? திரைத்துறையில் இருந்தாலும் ரஜினி போல சமூக கருத்துகளை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளை பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது…

Read More

நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பற்ற கோழை’ பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விளாசல்

நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பற்ற கோழை’ பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா விளாசல்

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:- முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். நாட்டில் இருக்கிற மக்கள்தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. அந்தமாதிரி கமல்ஹாசனுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப்போகப்போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டோட கதி என்னவாகும். அது…

Read More

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை: டிடிவி.தினகரன்

சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை: டிடிவி.தினகரன்

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அடையாறிலுள்ள டிடிவி. தினகரன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அவர் கூறும்போது, “சசிகலா ஷாப்பிங் செய்து வந்தது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் விதிமுறைகளை மீறி சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. சிறையில் இருப்பவர்களை தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்” என்றார். முன்னதாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சிறைத் துறை அதிகாரியான டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு…

Read More
1 136 137 138 139 140 181