தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி.
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ‘தாமிரபரணி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி’ நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நெல்லையை அடைந்தது. நேற்று காலை நெல்லையில் இருந்து தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வந்தது. அங்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தாமிரபரணியை பாதுகாக்குமாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஸ்ரீவைகுண்டம் அணையை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வட தமிழகத்தில் இருந்து வந்துள்ள நான் இங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது…
Read More








