விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியப் பிரதேசத்தில் வேளாண் விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு படைக்கும் கடவுள்கள் விஷயத்தில் மென்மையையும், பொறுமையையும் கடைபிடிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இந்தியாவில் வேளாண்துறை வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட…
Read More








