தம்பிதுரை, தினகரனை அடுத்து சிறையில் இருக்கும் சசிகலாவுடன் 5 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

தம்பிதுரை, தினகரனை அடுத்து சிறையில் இருக்கும் சசிகலாவுடன் 5 எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையை தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். மாலை எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்பிரமணியம் ஆகிய எம்.எல்.ஏக்களும் சந்தித்து பேசினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Read More

ஜெயலலிதா மரணத்தில் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணத்தில் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் ஓ.பன்னீர்செல்வம்

நெல்லை மாவட்ட அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய போது உடனிருந்த தலைவர்கள், தொண்டர் கள் இன்று நம்பக்கம் இருக்கின்றனர். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இங்கு கூடி உள்ளனர். 2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 16 பேரை ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்…

Read More

தேர்தல் கமி‌ஷன் வழக்கு சம்பந்தமாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை எடப்பாடி பழனிசாமி

தேர்தல் கமி‌ஷன் வழக்கு சம்பந்தமாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை எடப்பாடி பழனிசாமி

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன் எஸ்.ஸ்ரீராம்–பூஜாலெட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி:– நீங்கள்(முதல்–அமைச்சர்) உள்பட அமைச்சர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு உள்ளதே? பதில்:– நீங்கள் (பத்திரிகையாளர்) சொல்லித்தான் தெரியும். எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அரசு கோப்புகள் தேங்கி கிடக்கிறது என்று கூறி உள்ளாரே? பதில்:– எந்த கோப்புகளும் தேங்கவில்லை. அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு, அரசாணை வெளியிட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சிப்பொறுப்பேற்று 4 மாத காலத்தில்…

Read More

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை:ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை:ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

“ஆந்திர மாநிலத்தின், கொசஸ்தலை கிளை ஆற்றில், நான்கு இடங்களில் தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தடுப்பணை கட்டுவது குறித்து தமிழகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவில்லை. ஆந்திர அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்த பின் ஆந்திரா நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, தடுப்பணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு உடனே கை விட வேண்டும். இதில் தாமதம் காட்டாமல், தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

வெளிநடப்பு செய்வதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்

வெளிநடப்பு செய்வதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்

காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் தான் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகித முறை கொண்டு வருவதால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மதிப்பளிக்க வேண்டும் சட்டமன்றத்தில் சபாநாயகர், முதல்–அமைச்சர் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்தை…

Read More

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ள தாக அதன் பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று அறிவித்துள் ளார். இதுதொடர்பாக ஜெ.தீபா சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை பதிலளிக்க உள்ளது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி அளிக்கப்பட்ட மனு குறித்தும் விரைவில் பதில் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக ரகசிய வீடியோ சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக ரகசிய வீடியோ சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சமாக தலா ரூ.6 கோடி வழங்கப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அ.தி. மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மு.க.ஸ்டாலின் இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் 11.08 மணிக்கு முடிவடைந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கிய பிரச்சினை குறித்து பேச தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். கோர்ட்டில் உள்ள வழக்கு மு.க.ஸ்டாலின்:-ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள…. சபாநாயகர்:-இதை பற்றி இங்கு…

Read More

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா. இவரது சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளிக் கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில் கடந்த 11-ம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். என்னுடன் எனது நலன் விரும்பிகளும் வந்திருந்தனர். அங்கு பத்திரிகை நிருபர்களும் இருந்தனர். அப்போது அங்கிருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், பத்திரிகை நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கோதண்டராமன் மற்றும் அவ ருடன் இருந்தவர்கள் எங்கள் மீது தாக்கு தல் நடத்தி வெளியே தள்ளினர். தீபக் உறுதுணையோடு டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள்…

Read More

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா வரும் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே பெங்…

Read More

போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டதாகத் தகவல்

போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டதாகத் தகவல்

ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைய தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தின் வாயிலருகே தீபா தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவும் அவரது ஆதரவாளர்களும் பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் புரிந்ததாகவும் தெரிகிறது. தீபா கணவர் மாதவனும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். இது குறித்து தீபா கூறும்போது, “என் சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் கார்டன் வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய தீபக்தான் அழைத்தார். என்னையும் என் கணவரையும் பாதுகாவலர்கள் தாக்கினர், செய்தியாளர்களையும் தாக்கினர். நாங்கள் தப்பித்து வெளிவர காரணமே செய்தியாளர்கள்தான். ஆனால் தீபக், ‘தீபாவை யாரும் தடுக்கவில்லை’ என்று கூறியதாக தொலைக்காட்சி செய்திகள்…

Read More
1 139 140 141 142 143 181