அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகி யோருக்கு தொடர்பு கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப் பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா அழைப்பிதழை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் வழங்கும் காட்சிகளை செய்தித்தாள்களில் காணமுடிந்தது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என புரியவில்லை. அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோ ருக்கு சம்பந்தம் கிடையாது. முதல்வர் பழனிசாமி, வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடி உட்பட ரூ.71,000 கோடியை கோரியுள்ளார். இது நடைமுறை சாத்தியமற்றது என்றார்.

Read More

இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தால் எங்கள் மதிப்பே போய்விடும். இரு அணிகள் சேர்ந் தால் எங்களுக்கு வளர்ச்சி இருக் காது; வீழ்ச்சிதான் இருக்கும் என ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏக் கள் ஆறுக்குட்டி (கவுண்டம்பாளை யம்), ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப் பாளையம்), பி.ஆர்.ஜி.அருண் குமார் (கோவை வடக்கு), கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஆளுக்கொரு திசையில் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேசும் போது, ‘‘ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் இருப்பதுதான் உண்மை யான அதிமுக. எதிரணியில் பணம், பதவிக்காகவே உள்ளார்கள்….

Read More

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதம்

தமிழக சட்டசபையில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுகிறது. அரசுத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய மானியம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது. புதிய அறிவிப்புகள் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நிதித்துறை, வருவாய்த்துறை, வணிக வரித்துறை, கைத்தறித்துறை, நகராட்சி நிர்வாகத் துறை, வீட்டுவசதித் துறை செயலாளர்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்….

Read More

‘‘தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்’’; ஜெ.தீபா பேட்டி

‘‘தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்’’; ஜெ.தீபா பேட்டி

எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:– தமிழகத்தை சேர்ந்தவர் இங்கே முதல்–அமைச்சர் ஆவது சாத்தியமா? என்பது தெரியாது. ஆனாலும் தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே? அது தவறு போல எனக்கு தெரியவில்லை. எதற்காக காலதாமதம் கேள்வி:– தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், உங்கள் பேரவை சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? பதில்:– நிச்சயமாக நிறுத்தப்படுவார்கள். தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் யோசிக்கிறார்கள்?…

Read More

வைகோ ஜாமீனில் விடுதலை: தமிழக அரசின் கல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு பாராட்டு

வைகோ ஜாமீனில் விடுதலை: தமிழக அரசின் கல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு பாராட்டு

தேச துரோக வழக்கில் சிறை சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் வெளிவந்தார். 52 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து விடுதலையான வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “52 நாட்களாக சிறையில் நான் என்னையே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். நிறைய புத்தகங்கள் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போதுகூட கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் ஜாமீனில் வெளிவந்துள்ளேன். தமிழக அரசு கல்வித்துறையில் கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்கள் பாராட்டுக்குரியது. குறிப்பாக ரேங்க் பட்டியலை ஒழித்து பள்ளி மாணவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்தது வரவேற்கத்தக்கது. சிபிஎஸ்இ கல்வி முறைக்கு நிகராக மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அமைச்சர்…

Read More

ரஜினியை தமிழர் அல்லாதவர் என எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை: திருமாவளவன்

ரஜினியை தமிழர் அல்லாதவர் என எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை: திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்காக தமிழர் அல்லாதவர் என எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று ஒரு தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தமிழ் தேசிய இயக்கம்தான். திடீரென்று கர்நாடகாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ, கேரளாவிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ ஒருவர் தமிழகம் வந்து கட்சியைத் தொடங்கி அவர் ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் நாம் முரண்படலாம். ஆனால், ரஜினியைப் பொறுத்தவரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கி வருகிறார். தமிழக மக்களின் உணர்வோடும், அவர்களின் உரிமைகளோடும் இரண்டறக் கலந்திருக்கிறார். தமிழர்களுக்கும் ரஜினிக்குமான உறவு என்பது ஒன்றிப்போய் இருக்கிறது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட…

Read More

நாங்கள் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்வார்: ஓ.பன்னீர்செல்வம்

நாங்கள் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்வார்: ஓ.பன்னீர்செல்வம்

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் பேசியவை குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டின் நலனுக்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கவும், கடுமையான வறட்சியால் விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும்,அத்திக்கடவு-அவினாசி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து…

Read More

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்துபோன அ.தி.மு.க.வில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி செயல்பட்டு வருகிறது. தற்போது, அந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 8 பேர் சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குணசேகர், பரமேஸ்வரி,…

Read More

மீண்டும் தெர்மாகோல் திட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்

மீண்டும் தெர்மாகோல் திட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்

வைகை அணை தெர்மாகோல் திட்டத்தைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தையில் தெர்மாகோல் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் மின்சார செலவைக் குறைக்க, தெர்மாகோல் பொருத்தப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடையாது. சிறு, குறு விவசாயிகள் மட்டுமே கடன் தள்ளுபடிப் பயனைப் பெறுவார்கள்”…

Read More

தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் வைகோவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார். வைகோ தரப்பு வழக்கறிஞரும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புருஷோத்தமன் வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக 51 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ நேற்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 2009ம் ஆண்டு…

Read More
1 142 143 144 145 146 181