பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 ஆக உடைந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரு அணிகளும் தினந்தோறும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தநிலையில், திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்தவருமான க.பாண்டியராஜன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதில் அமைச்சர் ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கருத்து சிறந்த நகைச்சுவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி…

Read More

இரட்டை இலை சின்னம் பெற ஓபிஎஸ் அணி சார்பில் 12,600 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெற ஓபிஎஸ் அணி சார்பில் 12,600 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று 12 ஆயிரத்து 600 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. எனவே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு பிரிவினரும் தனித்தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் ரத்தான நிலையில், இரு தரப்பையும் கடந்த மாதம் 17-ம் தேதி சின்னம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சசிகலா தரப்பு…

Read More

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 நாளில் ரூ.750 கோடி வழங்கப்படும்: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் வேண்டுகோள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 நாளில் ரூ.750 கோடி வழங்கப்படும்: வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அமைச்சர் வேண்டுகோள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.500 கோடி யும், தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.250 கோடியும் அடுத்த 3 நாட்களில் பிரித்து வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலகத்தில் அவர் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குதல் தொடர் பாக தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த…

Read More

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனை ஜூன் 8-ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்- வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனை ஜூன் 8-ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்- வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த ஏதுவாக அவ ருக்கு சிறை மாற்று வாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1996-97 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர் 2 வழக்கு களை பதிவு செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்குகள் எழும்பூர் 2-வது பொரு ளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதில் ஒரு வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டு கடந்த மாதம் பதிவு செய்யப்பட்டு விட்டது. மற்றொரு வழக் கில் குற்றச்சாட்டு இன்னும் பதிவு செய் யப்படவில்லை. இந்த வழக்கு இரு…

Read More

டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு; திருநாவுகரசர் வரவேற்பு

டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு; திருநாவுகரசர் வரவேற்பு

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் வரவேற்றுள்ளார்.   இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.   தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு பதில் குடியிருப்பு பகுதிகளில் மாற்று கடைகள் அமைக்க அரசு முயற்சிப்பதை…

Read More

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி

அரசியல் பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.   தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு மத்திய பாஜகவின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் பழனிசாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களி்ன் முதல்வர்கள் பிரதமரை சந்தித்து பேசிய நிலையில், தமிழக முதல்வரால் தனிப்பட்ட…

Read More

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருவதால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இரு அணிகள் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு பல நாட்களாகிவிட்டன. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது மட்டுமே நடக்கிறது. இரு தரப்புக்கும் இடையில் கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை பேசும் போது, எதிரணியில் இருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். “நாங்கள் வந்துவிடு கிறோம். இந்த ஆட்சியை கலைத்துவிடாதீர்கள். ஓபிஎஸ் முதல்வராக இருக்கட்டும் என் கின்றனர்” என்றார். இந்நிலையில், நேற்று காலை மெரினா நீச்சல்குளத்தில்…

Read More

கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை

கீழ் கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழகத்தில் கீழ் கோர்ட்டுகளில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் தீர்ப்புகளை எழுதலாம் என சென்னை ஐகோர்ட்டு கடந்த 1994-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு எதிராக, கடந்த 2014-ம் ஆண்டு சோலை சுப்பிரமணியன் என்பவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை கிளையில் 2015-ம் ஆண்டு மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மனு இந்நிலையில், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்…

Read More

ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், குடியிருப்புகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார். இதேபோல் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.   இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ராயப்பேட்டை காவல் நிலையம் சென்னை அடையாறு, பசுமைவழி சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 4 அரசு மாளிகைகள் என மொத்தம் ரூ.155 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டிலான பொதுப்பணித்துறை திட்டங்களை முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார்.   இதேபோல் சென்னை திருவொற்றியூரில் 32 குடியிருப்புகள் உள்பட ரூ.41 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 363 காவலர்…

Read More

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி கிராமத்தைச் சேர்ந்த டி.விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– மதுபான கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நெடுஞ்சாலைக்கு அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடையை, தூங்காவி கிராமத்துக்குள் இடம் மாற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். தற்போது புதிதாக திறக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடை அருகே, பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

Read More
1 144 145 146 147 148 181