சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ரூ.300 கோடி தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் கொள்ளை சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கைநீட்டி பணம் வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.   சேகர் ரெட்டியின் குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்…

Read More

சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தமிழகத்தில் விரைவில் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தகவல்

சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால் தமிழகத்தில் விரைவில் தேர்தல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தகவல்

தமிழகத்தில் சசிகலா எண்ணப்படி ஆட்சி நடந்தால், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணி சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:   அதிமுக அணிகள் இணைந்து செயல்பட, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என 2 கோரிக்கைகளை முன்வைத்தோம்.  அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரால் 2 அணிகளின் இணைப்பை நிறைவேற்றவும் மற்றும் தடுக்கவும் முடியாது. சசிகலாவின் ஆதரவில் பதவிகள் வாங்கிய இவர்கள், அவருக்கு…

Read More

தமிழகம் முழுவதும் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.108 கோடியில் கட்டப்பட்ட 488 காவலர் குடியிருப்புகள், 25 காவல் நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   விருதுநகர் மாவட்டத்தில் ரூ.18 கோடியே 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 125 காவலர் குடி யிருப்புகள், 3 காவல் நிலையங் களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல் வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். சென்னை மாநகர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, நெல்லை, திருச்சி, விழுப்புரம் மாவட்டங் களில் ரூ.41 கோடியே 72 லட்சத்தில் 363 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன….

Read More

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து ஊழியர்கள் மே 15 முதல் வேலைநிறுத்தம் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4-ம் தேதி நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை…

Read More

ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெ. மரணம் முதல் தினகரன் எதிர்ப்பு வரை: அதிமுக அதிர்வலைகள்

ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் மீதான எதிர்ப்பு வரை தமிழக அரசியலில் அரங்கேறி வரும் சம்பவங்களின் தொகுப்பு. ஜெயலலிதா மரணம் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், தொடர்ந்து இரண்டாவது முறை தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். ஜெ. மறைந்த உடனேயே முதல்வரும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களும், எந்த சோகமும் இல்லாமல் இயல்பாகப் பதவியேற்றது பலரின் புருவத்தை உயர்த்தியது. அப்போலோ மருத்துவமனைக்கே அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு, ஓபிஎஸ் முதல்வராக உறுதிமொழிக் கடிதம் வாங்கப்பட்டதாகவும்…

Read More

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனை

தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 4 மாவட்டங்களுக்கு அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் போராட்டம் இல்லை… இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும்,…

Read More

மகளிர் காங்கிரஸ் போராட்டம்: பிரதமருக்கு வளையல் அனுப்பி ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதா?

மகளிர் காங்கிரஸ் போராட்டம்: பிரதமருக்கு வளையல் அனுப்பி ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதா?

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்து ராணுவ வீரர்களை கொன்று தலை துண்டித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி, அவருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை மகளிர் காங்கிரசார் இன்று (திங்கட்கிழமை) நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– பலம் வாய்ந்த பிரதமர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பலம் இல்லாத பிரதமரை நாடு பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் தற்போது பலம் வாய்ந்த பிரதமரை பெற்று இருக்கிறது. இந்திய ராணுவ…

Read More

மீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்

மீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்

அதிமுக அணிகளை இணைக்கும் முடிவில் இருந்து ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார். இனி இணைப்புக்கு வேலை இல்லை என அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து அடியோடு விலக்கி வைக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளைதான் அதிமுக அணிகள் இணைப்புக்கு பிரதானமாக முன்வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு உறுதி யான பதிலை எடப்பாடி பழனிசாமி அணி இதுவரை அளிக்கவில்லை. மாறாக, ‘ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு நீதிமன்ற விசார ணையில் இருப்பதால் இப்போ தைக்கு அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட வர்கள் பேசி வருகின்றனர். ஒருபக்கம் ஓபிஎஸ்…

Read More

அ.தி.மு.க. பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா பேட்டி

அ.தி.மு.க. பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நக்மா பேட்டி

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை பயன்படுத்தி பாரதீய ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா கூறினார். வளையல் அனுப்புவோம் காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நடிகை நக்மா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் 25 மத்திய ஆயுதப்படை வீரர்கள் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர். காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் பிரச்சினைகளில் மத்திய அரசு மக்களை திசைதிருப்ப முயற்சித்து வருகிறது. மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எந்த பிரச்சினையையும் கையாளும் திறன் இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நக்சலைட்டு மற்றும் இந்திய எல்லையில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க தவறியதால் வளையல் அணிந்துகொள்ளும்படி தற்போதைய மந்திரி…

Read More

தமிழகம் முழுவதும் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சிகிச்சை பிரிவு சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அரசு மருத்துவமனையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 படுக்கைகள் கொண்ட ஆண் மற்றும் பெண் பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப்பின் ஆண் மற்றும் பெண் கவனிப்பு பிரிவு மற்றும் 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு மற்றும் கதிர்வீச்சு பிரிவு; தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 90…

Read More
1 145 146 147 148 149 181