குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா யோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா யோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜா நேற்று கூறியதாவது: 2009-ம் ஆண்டு நடந்த இலங்கை போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசு செய்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து சர்வதேச விசாரணை நடத்த அண் மையில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் விசாரணை நடத்த 2 ஆண்டுகள் அவகாசமும், வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தக் கூடாது என்று இலங்கை கேட்டதால், ஒத்தி…

Read More

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனே உருவாக்க வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனே உருவாக்க வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை உடனே உருவாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதை மனமார வரவேற்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது சேவையை மறந்து தன்னலத்துடனும், சுய நலத்துடனும் செயல்படுவது, நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்பதில் திமுக அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த உன்னத நோக்கத்துடன்தான் பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தை 1973ல் திமுக…

Read More

தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்

தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, ரூ.30 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 54 திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 140 ஆண்டு காலத்தில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. பருவமழை பொய்த்ததால் அணைகள், ஏரிகளில் தண்ணீர் இல்லை. ஆனாலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேவையான குடிநீர் வழங்கி வருகிறது. குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்களுக்கு…

Read More

டிடிவி தினகரன் மீது பொய் வழக்கு; எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் – நாஞ்சில் சம்பத்

டிடிவி தினகரன் மீது பொய் வழக்கு; எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் – நாஞ்சில் சம்பத்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரை கைது செய்த டெல்லி போலீஸ் சென்னை அழைத்து வந்து இன்று விசாரணை நடத்துகிறது. இதற்கிடையே அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான விவகாரமும் இழுத்துக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், தினகரனை அரசியலில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். போதிய ஆதாரம் இல்லாமல் தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். தினகரனிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள், பொய் வழக்கு புனையப்பட்டு உள்ளது….

Read More

முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு

முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு

அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உறுதியாக தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி நிர்வாகிகள் கூட்டம், எம்எல்ஏ செம்மலை தலைமையில் நடந்தது. அதில், ஓபிஎஸ் அணி தனித்து செயல்பட வேண்டும்…

Read More

பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 உயிரியல் பாட தேர் வில் தவறான விடைகளுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி கே.வர்ஷினிதேவி சார்பில் அவரது தாயார் ஏ.கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது: எனது மகள் கடந்த மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். மகளை மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம். மார்ச் 31-ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ‘பிறந்த குழந்தையின் உடல் எடையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?’’ என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு 85 முதல் 90 சதவீதம் என்பதுதான்…

Read More

விவசாயிகள் தற்கொலை குறித்த அரசு நிலைப்பாட்டுக்கு கம்யூ. கண்டனம்

விவசாயிகள் தற்கொலை குறித்த அரசு நிலைப்பாட்டுக்கு கம்யூ. கண்டனம்

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவல் அளித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவித்து, நிலவரியை முழுமை யாக தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது மிகுந்த கவலை அளிப்பதுடன், கண்டனத்திற்குரியது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதை ஏற்றுக் கொண்டார். மேலும் விவசாயிகள் தற்கொலை…

Read More

மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபை கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் தினமான இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முறை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிராம பஞ்சாயத்துகளின் செயலாளர்கள் கிராம சபை கூட்டத்தை முன்னின்று நடத்துவார்கள். இளைஞர்கள் முடிவு முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள், ஊர் பிரச்சினைகளை முன்னின்று எடுத்துச்செல்லும் தன்னார்வமிக்க இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்கலாம்….

Read More

தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் சேலத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேச்சு

தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் சேலத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேச்சு

சேலத்தில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: இரு அணிகள் இணைப்புபேச்சுவார்த்தைக்கு வேண்டுமென்றே சிலர் முட்டைக்கட்டை போடுகின்றனர். ஓபிஎஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர். உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. ஆட்சியை கைப்பற்றலாம் என்ற திமுக,பிரிந்துசென்ற அனியினர் கனவு கானல் நீர். நிதிப்பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்னோடு உழைப்பினால் மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் நான். தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபித்துள்ளோம். 90% நிர்வாகிகள் நம் அணியிலேயே தான் உள்ளனர். அதிமுகவை முடக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம்…

Read More

ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலையை பிரதமர் நாளை வெளியிடுகிறார்; கே.என். ராமச்சந்திரன் எம்.பி. தகவல்

ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலையை பிரதமர் நாளை வெளியிடுகிறார்; கே.என். ராமச்சந்திரன் எம்.பி. தகவல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அவதரித்து வைணவ இறைபணியில் உலகமெல்லாம் சிறந்து விளங்கியவர் ஸ்ரீராமானுஜர். இவருடைய ஆயிரமாவது அவதார பெருவிழா ஸ்ரீபெரும்புதூரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தை கடந்த 11–ந் தேதி சந்தித்து ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியீட்டு விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடக்கிறது. ஸ்ரீராமானுஜர் நினைவு தபால்தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். விழாவில் நான் (கே.என்.ராமச்சந்திரன்), தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையாளர் வீரசண்முகமணி ஆகியோர் கலந்துகொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறி…

Read More
1 147 148 149 150 151 181