ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தங்களது அணியை பலப்படுத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தங்களது அணியை பலப்படுத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு

சென்னை கொட்டிவாக்கத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது அணியை பலப்படுத்துவதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க. அணிகள் அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற மற்றொரு அணியும் தற்போது செயல்பட்டு வருகிறது. தேர்தல் கமி‌ஷனில் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க இந்த 2 அணிகளும் இணைய முடிவு செய்தது. 2 அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் குழுவும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில்…

Read More

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சூலூர் எம்எல்ஏ கனகராஜ்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சூலூர் எம்எல்ஏ கனகராஜ்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், ”மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான், நலத்திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்” என்றார். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் தனியார் கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில்…

Read More

தமிழக அரசு சார்பில் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இலங்கையில் உள்ள கண்டியில் 17-1-1917-ல் பிறந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் குடியேறியது. வறுமையினால் பள்ளிப் படிப்பை கைவிட்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய எம்.ஜி.ஆர். திரைத்துறையிலும் நுழைந்தார். தனது கடின உழைப்பாலும், கருணை உள்ளத்தாலும் திரைத்துறையில் வானுயர உயர்ந்தார். 136 திரைப்படங்களில் நடித்த அவர் மக்களால் புரட்சி நடிகர் என அழைக்கப்பட்டார். அண்ணாவின் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1952-ல் திமுகவில் இணைந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது மக்கள் தலைவராக எம்.ஜி.ஆர். இருப்பதை அண்ணா உணர்ந்தார்….

Read More

பாஜகவினர் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர்: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜகவினர் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகின்றனர்: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு 2017-ம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் விருதுகள் வழங்கப் பட்டன. அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் விருது கள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது, கவிஞர் ஓவியாவுக்கு பெரியார் ஒளி விருது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி தியாகராசனுக்கு காமராஜர் கதிர் விருது, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தைச் சேர்ந்த மெளலவி தர்வேஷ் ரஷாதிக்கு காயிதே மில்லத்…

Read More

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன்

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஒபிஎஸ் அணியுடனான கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா சென்னை பகுதி மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல், மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி சுமுகமான முறையில் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு…

Read More

தமிழக மின் தேவைக்காக 9 கோரிக்கைகள்: டெல்லி மாநாட்டில் அமைச்சர் தங்கமணி பேச்சு

தமிழக மின் தேவைக்காக 9 கோரிக்கைகள்: டெல்லி மாநாட்டில் அமைச்சர் தங்கமணி பேச்சு

தமிழக மின் தேவைக்காக 9 கோரிக்கைகளை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்சாரத் துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார். எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத்துறை மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் மாநாடு இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்றுப் பேசியதாவது: ”ஜெயலலிதாவின் அயராத முயற்சியால் மிக விரிவான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு எரிசக்தித் துறையில் கடந்த ஐந்து வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது மின் உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டிலிருந்து மாநில மற்றும் மத்திய தொகுப்பில் புதிய…

Read More

விவசாயிகள் தற்கொலை வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் தற்கொலை வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ”வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர். முன்னதாக, கடந்த…

Read More

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும்

தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க.(அம்மா) மாணவரணி செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். சங்க இணைச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். இதில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- காவிரி பிரச்சினைக்காக இறுதிவரை போராடியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்தியஅரசிதழில்…

Read More

50 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

50 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீடுக்கு பெற்றுத் தராததற்காக தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி தலா ரூ.1 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை அரசு சந்தித்துள்ளது. இந்தத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்…

Read More

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்பதால் தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் வி.மேகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சீமைக்கருவேல மரம் பல்வேறு நாடு களில் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் ஏராளமாக உள்ளன. வறட்சி பாதித்த பகுதிகளில் இந்த மரங்கள்தான் பசுமைப் போர்வையாக உள்ளன. இந்த மரங்கள் கரித்தூள், எரிபொருள், காகிதம், அட்டை போன்ற பொருட்களை தயாரிப் பதற்கும், காற்றின் வேகத்தைக் குறைப் பதற்கும், வேலி அமைப்பதற்கும், சில விலங்குகளின் உணவாகவும்…

Read More
1 146 147 148 149 150 181