தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைத்துவிடலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தப்பு கணக்கு போட்டால் பகல் கனவாக முடியும்
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக விவசாயிகளின் 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.மு.க. மீதும், மு.க.ஸ்டாலின் மீதும் உதவாத வாதங்களை அடுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். காவிரிக்காக என்ன செய்தது தி.மு.க. என்று அரசியல் அரிச்சுவடி தெரியாதது போல் கேள்வி எழுப்புகிறார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, காவிரி இறுதி தீர்ப்பை பெற்றது, அந்த தீர்ப்பை…
Read More









