முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதை ஏற்று அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்குவதாக தினகரனும் அறிவித்து இருக்கிறார். இணைப்பு முயற்சி இதைத்தொடர்ந்து பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க. இரு அணிகள் இணைவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வை இணைப்பதற்காக அ.தி.மு.க. அம்மா…

Read More

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்.ஜி.ஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததில் தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி. தர்ம யுத்தம் தொடரும். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

Read More

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்

கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் நேற்றே ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் நானே அறிவித்திருப்பேன். கடந்த 14-ம் தேதி வரை அமைச்சர்கள் என்னை சந்தித்துவந்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் பேசினர். திடீரென்று அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கப்பார்க்கிறார்கள். அவர்களது அச்சத்துக்கு என்ன காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என்னை நீக்கினால்தான் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்மை கிடைக்குமென்றாம் அந்த நன்மை அவர்களுக்கு…

Read More

தினகரனை தவிர்த்துவிட்டு அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை: அதிமுகவுக்குள் மீண்டும் அசாதாரண சூழல்

தினகரனை தவிர்த்துவிட்டு அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை: அதிமுகவுக்குள் மீண்டும் அசாதாரண சூழல்

தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக அதிமுகவுக்குள் எதுவும் நடக்காது என்கிறார்கள். ஆனால், தற்போது கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள். ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதாகவே இல்லாவிட்டாலும் யாரும் எதிர்க் கேள்வி கேட்டதில்லை; கேட்கவும் முடியாது. ஆனால், இப்போது அந்தக் கட்சியில் ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்கிறார்கள், ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர நினைத் தது சசிகலா குடும்பம். அந்த நேரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி தூக்கினார். சசிகலா குடும்பத்தின் மீதிருந்த வெறுப்பு காரணமாக…

Read More

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு போன்ற விஷயங்களால் அதிமுக சசிகலா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஓபிஎஸ் கூறும்போது,…

Read More

முதல்வர், அமைச்சர்களுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனை: அதிமுக அணிகள் இணைவதாக தகவல்

முதல்வர், அமைச்சர்களுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனை: அதிமுக அணிகள் இணைவதாக தகவல்

அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சி யில் ஓபிஎஸ் சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணை யத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வீட்டில்…

Read More

பிரிந்த அணிகள் மீண்டும் இணைய ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுகவில் சசிகலா குடும்பத்தை நீக்க முயற்சியா?

பிரிந்த அணிகள் மீண்டும் இணைய ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுகவில் சசிகலா குடும்பத்தை நீக்க முயற்சியா?

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர் பாக மற்ற அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் இவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள் ளன. இந்த பரபரப்பான சூழலில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் இன்று பெங்களூரு செல்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தற்போது அதிமுக அம்மா அணி (சசிகலா), அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி (ஓ.பன்னீர்செல்வம்) என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் பெயர், சின்னம், இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. கட்சி, சின்னம்…

Read More

சசிகலா அதிருப்தி தினகரனை சந்திக்க மறுப்பு?

சசிகலா அதிருப்தி தினகரனை சந்திக்க மறுப்பு?

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, உள்ளிட்ட அடுத்தடுத்த நெருக்கடிகளால் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த அ.தி.மு.க. அம்மா பிரிவு துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை 6.30 மணிவரை அவர் பெங் களூரு சிறைக்கு வரவில்லை. சசிகலாவையும் சந்திக்க வில்லை. வேலூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அவரால் உரிய நேரத்தில் பெங்களூர்…

Read More

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார், ஆனால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஸ்காட்லாந்து யார்டு மல்லையா கைது குறித்து தெரிவிக்கும் போது, “மெட்ரோபாலிட்டன் போலீஸின் நாடுகடத்தல் பிரிவு இன்று காலை நாடுகடத்தல் வாரண்டில் உள்ள நபரை (மல்லையா) கைது செய்தது. இந்திய அதிகாரிகள் கோரிக்கைக்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியது. மேலும், “செண்ட்ரல் லண்டன் போலீஸ் நிலையத்திற்கு இவர் வந்த பிறகு கைது செய்யப்பட்டார். வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் படுத்தப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஊடக ஊதிப்பெருக்கல் என்று ட்வீட் செய்த மல்லையா, “எதிர்பார்த்தது போலவே நாடுகடத்தல் மீதான விசாரணை இன்று…

Read More

அ.தி.மு.க. அணிகள் இணைய ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பலி

அ.தி.மு.க. அணிகள் இணைய ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் சொர்ணம் (வயது 65). அ.தி.மு.க. தொண்டர். அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த 15-ந்தேதி அவர் சென்னை வந்தார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்த அவர் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சொர்ணம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Read More
1 151 152 153 154 155 181