டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்

டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்

டெல்லியில் இன்று (சனிக்கிழமை) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் ‘தாலி அறுக்கும்’ போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியோரின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினர். டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 33-வது நாளை நிறைவு செய்துள்ளது. இது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு…

Read More

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் கூறியுள்ளார். சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று (சனிக்கிழமை) திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் தஞ்சை சென்றுள்ளார். மகாதேவன் மரணம் குறித்து டி.டி.வி தினகரன் கூறும்போது, “மகாதேவன் மரணம் குறித்து சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்” என்று கூறினார்.

Read More

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 47, தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது. தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பதவி வகித்து பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளதால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மாமா மகன் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் தஞ்சை செல்கிறார். மகாதேவன் மரணம் குறித்து பெங்களூரு சிறையில்…

Read More

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயலின்மை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தமிழக அரசின் செயலின்மை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, தீவிர வறட்சி நிலைமை, கடினமான வாழ்வாதார நிலை போன்றவை குறித்து தமிழக அரசின் செயலின்மை மற்றும் மவுனம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘மனிதார்த்த கரிசனைகள்’ இன்றி தமிழக அரசு உள்ளது என்று கவலை வெளியிட்டார். விவசாயிகளைக் காப்பது மாநில அரசுகளின் கடமை இவர்களில் பலர் கடந்த 31 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர், என்றார் அவர். மேலும், தமிழக அரசு இதில் காட்டும் மெத்தனப் போக்கும் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டுமே தவிர எல்லாப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசின் உதவியை…

Read More

இரட்டை இலை சின்னம் விவகாரம்: 8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம்: 8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி, தேர்தல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்துப் பேசியது. இறுதியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கி…

Read More

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்பது வதந்தியே: டிடிவி தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா என்பது வதந்தியே: டிடிவி தினகரன்

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறுவது வதந்தியே என்று அதிமுக(அம்மா) கட்சியின் துணை பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று சென்ற அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: ”வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அது வதந்தியே. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவில்லை. விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் எப்போது ஜோசியம் சொல்ல ஆரம்பித்தார்? ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடந்தால் நான்தான் வேட்பாளர்” என்று டிடிவி தினகரன்…

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு; இயக்குநர் கவுதமன் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு இளைஞர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு; இயக்குநர் கவுதமன் கைது

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண் சோறு, நிர்வாணப் போராட்டம் என பல்வேறு கடுமையான போராட்டங்களை…

Read More

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து திமுக எம்.பிக்கள் புகார்

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து திமுக எம்.பிக்கள் புகார்

திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு மூன்று முக்கிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,  காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 30 நாள்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் தி.மு.க எம்பி-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

Read More

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? – வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் என்ன? – வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது, கார் ஓட்டுநர் எடுத்துக்கொண்டு ஓடிய ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததையொட்டி வாக்காளர் களுக்கு சிலர் பணம் கொடுத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை தெரிவித் துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மத்திய போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் சில அமைச்சர்கள் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு இடையூறு செய்ததாக…

Read More

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம். இன்று வருமான வரித் துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி அபரிமிதமானது. புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் கிராமத்தில் பிறந்தவர் விஜயபாஸ்கர். இவரின் தந்தை…

Read More
1 153 154 155 156 157 181