டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்

டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்

அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது.“இரட்டை இலை” சின் னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் சசிகலா தலைமையிலான அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் “இரட்டை இலை” சின்னத்தை பெற அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நேற்று அதிகாலை சுகேஷ் சந்திர சேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. அவர் டெல்லி போலீசாரிடம்…

Read More

முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: . ”எங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓபிஎஸ்ஸிடம் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் தான் எங்களிடம் பேச வர வேண்டும். ஆனால், சில அமைச்சர்கள் அவர்களது சுயநலனுக்காக கூட்டம் நடத்துவது ஏற்க முடியாது. என்னைப் போன்றவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எதற்காகவும், யாரிடமும் மண்டியிட மாட்டோம். ஓபிஎஸ் அணியுடன் பேச்சு நடத்த அமைச்சர்கள் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அதுபற்றி…

Read More

இரு அணிகள் மீண்டும் இணைகிறதா?- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்கிறார் ஓபிஎஸ்

இரு அணிகள் மீண்டும் இணைகிறதா?- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்கிறார் ஓபிஎஸ்

இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இதுதொடர்பாக மற்ற அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் இவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டன. இந்நிலையில், கட்சி சின்னம் பெற தினகரன் லஞ்சம் வழங்கியதாக…

Read More

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு; இடைத்தரகர் கைது

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு; இடைத்தரகர் கைது

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரின் பெயர் சுகேஷ் சந்திரசேகரா என்றும் அவரிடமிருந்து பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீஸில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்), சுகேஷ் சந்திரசேகரா மீது லஞ்சம் மற்றும் சதி குற்றச்சாட்டுகளும் டிடிவி.தினகரன் மீது லஞ்சப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.5 கோடி சிக்கியது: டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை போலீஸார்…

Read More

வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜர்

வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜர்

முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். வருமானவரி புலனாய்வு பிரிவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 7–ந்தேதி அதிரடி சோதனை நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் சிக்கியது. விஜயபாஸ்கருக்கு சம்மன் இந்தநிலையில்…

Read More

கனத்தில் போராட்டக்காரர் கட்டிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: ராணுவம் மீது வழக்குப்பதிவு

கனத்தில் போராட்டக்காரர் கட்டிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: ராணுவம் மீது வழக்குப்பதிவு

காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்குக் கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பல வாக்குச்சாவடி களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பாது காப்புப் படையினர் மீது தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டனர். கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து, கல்வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகப் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய தாக வீடியோ ஒன்று அண்மையில்  வெளியானது. இது சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. ராணுவத்தின் இந்த செயலுக்கு  காஷ்மீர்…

Read More

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

வருமான வரித்துறை புகாரில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7-ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறையினர் புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி…

Read More

கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்

கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்

தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது வெறும் வதந்தியாக இருக்கும். எனக்கு அம்மாதிரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை” என்றார். டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளர் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதிமுக சின்னம் முடக்கத்தில் மத்திய அரசு தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்கு அந்த மாதிரியான தலையீடு எதுவும் தெரியவில்லை. அதிமுகவின் இரட்டை இலை…

Read More

கட்டுமான பணியின்போது பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி 12 பேர் உயிருடன் மீட்பு

கட்டுமான பணியின்போது பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி 12 பேர் உயிருடன் மீட்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. இவர் அங்கு ‘பின்குஷன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ என்ற நடுநிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி வருகிறார். கடந்த ஒரு வருடமாக இதன் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. வருகிற கல்வியாண்டில் இந்த பள்ளியை திறப்பதற்காக இரவு பகலாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். 2-வது மாடிவரை கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் முன்பகுதியில் போர்டிகோ கட்டும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

Read More

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றுக: அன்புமணி

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றுக: அன்புமணி

தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவப் பொது நுழைவுத் தேர்வான நீட்டிலிருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்களிக்க முடியாது என்று…

Read More
1 152 153 154 155 156 181