தினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெறவிருந்த நிலையில் தினகரனின் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட…

Read More

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்குகிறது: காவிரி விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்குகிறது: காவிரி விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தருமபுரியில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி நிகழ்ச்சியை பார்வையிட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தருமபுரி வந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரியில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகத்தின் விவசாயத்தைக் காக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு துரதிருஷ்டவசமாக பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸும் அதன்…

Read More

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்

தர்மபுரியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக-வின் கொள்கைத் தாயகமான ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. தர்மபுரியில் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிக்கான நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது தமிழக அரசியல் நிபுணர்களின் பார்வையில் பலவித ஐயங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் அதிமுக-வின் இன்னொரு பிரிவான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தலைமை பிரிவுதான் பாஜகவுக்கு நெருக்கமானது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் அன்பழகன் இது குறித்து கூறும்போது,…

Read More

அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் வீடுகள் சிறப்பு திட்டம்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் ஒரு லட்சம் வீடுகள் சிறப்பு திட்டம்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

அடையாறு, கூவம் கரையோரங் களில் வசிக்கும் 2 லட்சம் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி யில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் கே.பழனிசாமி தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான மனுவை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கினார். அது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வேண்டு கோளும்விடுத்தார். இது தொடர்பாக, தமிழக முதல்வர் கே.பழனிசாமி பேசியதா வது: தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப் பட்டுள்ளதால், விரைவில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்கப்படும். தற்போதைய ஸ்மார்ட்…

Read More

பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி 4 ஆண்டுகள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமெனில் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் முதல்வராக இருக்க வேண்டும். சசிகலா மூலம் முதல்வர் ஆனவர் பழனிசாமி. அவரை முதல்வராக ஏற்க முடியாது என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனு சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங் கலத்தில் நேற்று அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என்பதை கட்சியின் உண்மையான தொண் டர்களும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோரும் விரும்புகின்றனர். சசிகலா தரப்பு மூலம் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு…

Read More

சுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைப்பு தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ., அமைப்பு தேர்தலுக்கான மாநில தேர்தல் அதிகாரி பாபி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– குடிநீர் பிரச்சினை தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி…

Read More

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய சில அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்; பாண்டியராஜன் பேச்சு

செங்குன்றம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ., மாதவரம் பஜார், புழல் உள்ளிட்ட பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:– ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் கனவான தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தரவேண்டும் என்ற நோக்கத்தில் 2 அணிகளும் இணைய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடன்பாடு உண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2…

Read More

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, கோரிக்கைகளை வலியுறுத்தி 15–ந் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை சென்னை பல்லவன் சாலையில் நேற்று மதியம் நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட 47 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதிகட்ட பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்க முதல்–அமைச்சர் ஒப்புதல்…

Read More

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:– அனைவரும் வரவேற்பு பிளஸ்–2 பொதுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். அதன் முன்னோட்டமாகதான் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக பிளஸ்–2 தேர்வு முடிவு 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு செல்போன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும். ரேங்க் முறை இருந்தபோது பெரும்பாலான கல்லூரிகள் அதை பயன்படுத்தி மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தன. ஒரு மதிப்பெண் குறைந்து…

Read More

தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு, மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்து ஆனது. ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் கழக தலைவர்–மேலாண்மை இயக்குனர் பி.வி.ரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நிதி உதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம். சாய்குமார்,…

Read More
1 143 144 145 146 147 181