இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு – சீமான் கண்டனம்

இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு – சீமான் கண்டனம்

இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் பாஸ்போட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இலங்கையின் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு, தமிழும் இருக்கும் நிலையில் தமிழ் மொழியை முழுவதுமாக நிராகரித்து, இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசின் இனத்துவேசப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழும், தமிழர்களும் ஒதுக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டு வரும் அதேவேளையில், சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்று உரைக்கிறேன். இன்றைக்கு எங்களது தாய் நிலத்திலேயே எங்களது தாய்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக தமிழர்கள்…

Read More

பேஸ்புக், டுவிட்டருக்கு இந்தியாவில் தடை வருமா ?

பேஸ்புக், டுவிட்டருக்கு இந்தியாவில்  தடை வருமா ?

இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021ன் கீழ் செயல்படாத காரணங்களால் நாளை (மே 25) முதல் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ‛டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான செய்திகள் டிரெண்டானது. பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், ‘டூல்கிட்’ ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த ஆவணங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரிய புயலைக் கிளப்பிய நிலையில்,…

Read More

சீனாவின் 2022 ஒலிம்பிக்கை புறக்கணிக்க நான்சி பெலோசி அழைப்பு

சீனாவின் 2022 ஒலிம்பிக்கை புறக்கணிக்க நான்சி பெலோசி அழைப்பு

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சீனா நாட்டின் பெய்ஜிங்கில் நடைபெறும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அழைப்பு விடுத்து உள்ளார். சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சித்து உள்ளார்.மேலும் இதில் கலந்து கொள்ளும் உலகளாவிய தலைவர்கள் தார்மீக அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்று சீன அரசாங்கத்தை மதிக்க வேண்டாம்.நடந்துகொண்டிருக்கும் ஒரு இனப்படுகொலையின் வெளிச்சத்தில் நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் செல்வது உங்கள் கவுரவ்த்திற்கு கேள்விக்குரியது என கூறி உள்ளார். சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யூ ராய்ட்டர்ஸிடம், ஒலிம்பிக்கில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா மேற்கொண்ட…

Read More

“தலைமை சரியில்லை “கமல்ஹாசன் கட்சியில் இருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய நிர்வாகி

“தலைமை சரியில்லை “கமல்ஹாசன் கட்சியில் இருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய நிர்வாகி

சட்டசபை தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர் விலகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலராக இருந்த முருகானந்தம் திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: – கட்சியில் இணைந்த போது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டது. இதனால், கட்சியில் என்னால் முழுமையாக உழைக்க முடிந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் அற்றுபோய் விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை…

Read More

கொரோனா தொற்று 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

கொரோனா  தொற்று 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.இந்தநிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலேயே ரங்கசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் நெருக்கமாக இருந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையொட்டி ரங்கசாமியும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது. உடனடியாக கடந்த 9-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரங்கசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் குணமடைந்ததை தொடர்ந்து…

Read More

ஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் !!

ஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் !!

கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையானது, ஸ்ரீரங்கம் ரங்க நாராயண மடம். வைணவத்தை வாழ்வித்த ஸ்ரீ ராமானுஜரால் உருவாக்கப்பட்ட மடம் இது. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலும், அருட்பணியிலும், இந்த மடத்தின் ஜீயர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், 50வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018 ஜூலை 11ல் காலமானார். மூன்று ஆண்டுகளாக, இந்த மடத்துக்கு, அடுத்த ஜீயர் எவரும் தேர்வு பெறவில்லை. இந்நிலையில் தான், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அலுவலக உதவியாளர், டைப்பிஸ்டை தேர்வு செய்வது போன்று, ஒரு மடத்தின் ஜீயரை தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது, ஆன்மிக பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read More

கமல் கட்சிக்கு பை பை !! காலியாகும் கூடாரம் !! ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் – தமாஷ் !!

கமல் கட்சிக்கு பை பை !!  காலியாகும் கூடாரம் !! ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் – தமாஷ் !!

நடிகர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அதன் துணை தலைவர் மகேந்திரன் விலகினார். இவரைத்தொடர்ந்து பொன்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய கமல், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்தார். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல் தோற்றார். இந்நிலையில் கட்சி துணை தலைவர் மகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான…

Read More

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை இன்னமும் உலுக்கி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜுலை மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் தொற்று பரவலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்…

Read More

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை

சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.குண்டர்களால் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் சென்று, உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர். மேலும், வெளியே வைத்திருந்த அம்மா உணவகம் என்ற பலகையை கிளித்து எறிந்து, போட்டோவை வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து…

Read More

கேரள முதல்வராக மாமனார் & எம்.எல்.ஏ வாக மருமகன்முகமது ரியாஸ்!!

கேரள முதல்வராக மாமனார் & எம்.எல்.ஏ வாக மருமகன்முகமது ரியாஸ்!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார். கேரள சட்டசபைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரள சட்டசபையில் கடந்த காலங்களில் தந்தை – மகன், தந்தை – மகள் என, சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.,க்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டசபைக்குள் வருவது இதுதான்…

Read More
1 55 56 57 58 59 181