குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி இந்தியா பெரும் சாதனை !!

குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி  இந்தியா பெரும் சாதனை !!

உலகத்திலேயே அதிகளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோவிட் பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிக தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது. அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தநிலையில், 32.33 கோடி தடுப்பூசிகள்…

Read More

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைக்க சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி, ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் செய்ததைக் கண்டித்து, சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க, ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மன்ஜிந்தர் எஸ் சிர்சா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளதாவது: 62 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டு…

Read More

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு…

Read More

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, ‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு, பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதை ஏற்க, ‘டுவிட்டர்’ நிறுவனம் மறுத்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கியது.கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘டூல்கிட்’ வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மற்றும் குர்கானில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற போலீசார், ‘நோட்டீஸ்’ அளித்தனர். இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதளம் தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்கள்…

Read More

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக – பா.ஜ.,வின் இப்ராகிம்

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக –  பா.ஜ.,வின் இப்ராகிம்

”சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,” என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார். மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது. கடந்த காலத்தில், முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும்…

Read More

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சி, மன நிறைவு தரும் சந்திப்பாக அமைந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஸ்டாலின் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காரணமாக, பதவியேற்றதும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் தற்போது கட்டுக்குள் வந்த நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி கொடுத்தார். சந்திப்பு மகிழ்ச்சியான,மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது. முதலில், முதல்வராக பதவியேற்றதற்கு எனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்…

Read More

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் பலர் மருத்துவம் பார்க்கவும், பிரிட்டன், கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களோடு சேர்ந்து வாழவும் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமானப் போக்குவரத்தை ரத்து செய்ததுடன் விமான நிலையங்களையும் மூடியது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இலங்கைக்கு அருகே இந்தியா இருப்பதால், இந்தியாவில் தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதி…

Read More

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரியை வெளியேற்றிய கிறிஸ்துவ திருச்சபை !!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரியை வெளியேற்றிய கிறிஸ்துவ திருச்சபை !!

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எப்.சி.சி.,) உத்தரவிட்டுள்ளது. சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், ‘கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’ என, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் சொன்னார். இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா…

Read More

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமான் – பிள்ளை பாதி … புராணம் பாதி !!

சேக்கிழார் பெருமானின் பெருமையையும் … அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை அவர் எப்படி வெளிப்படுத்தினார் என்பதையும் … அவரின் பெருமை எப்படி நாயன்மார்களின் பெருமைக்கு சமமானது என்பதையும் அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ராகவேந்திரன்!! பெரிய புராணம் தந்த சேக்கிழாரின் பெருமைகளை விளக்கும் இந்த விடேஓயாவை கண்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? சம்போ மஹாதேவ்…

Read More

டில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் !!

டில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் !!

உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தற்போது, ‘கோவிட் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை’ என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது. கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது, ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது. பா.ஜ., தேசிய பொது செயலர் சந்தோஷ்குமார் மற்றும் ராதா சிங் ஆகியோர் அங்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதனால், யோகி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனைபா.ஜ., மேலிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என அறிவித்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். இன்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய…

Read More
1 53 54 55 56 57 181