பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த  நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர்…

Read More

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ? இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ?  இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.

Read More

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம்…

Read More

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது – எல்.முருகன்

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது –  எல்.முருகன்

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேல் யாத்திரை தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவ.,17 தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்துகொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24ல் கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2ல் இளைஞரணிச் செயலாளர்…

Read More

பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!

பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!

பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின. பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19 தொகுதகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 25 சதவீத வெற்றியை கூட, காங்கிரஸ் தாண்டாத காரணத்தால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது….

Read More

ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி

ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி

குமரி மாவட்ட கொரோனோ தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். 268.58 கோடி செலவிலான அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் கூறியதாவது: அரசு வழிக்காட்டுதலை சரியாக பின்பற்றியதால், குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவால், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு விதித்த தடை விலக்கப்படுகிறது.இன்று முதல், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கப்படும். விவேகானந்தர் பாறையை திருவள்ளுவர் சிலையுடன் இணைக்க, 35 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படும். மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது போல், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க…

Read More

இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பா.ஜ., வெற்றி – தொண்டர்கள் கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பா.ஜ., வெற்றி – தொண்டர்கள் கொண்டாட்டம்

இடைத்தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் பா.ஜ..,வே பா.ஜ., வெற்றி வருவது அக்கட்சியினர்… தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்று அதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (நவ.,10) நடந்து வருகிறது. இதில் பீஹாரில் பா.ஜ., அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பீஹாரில் மட்டும் தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் இருந்த பா.ஜ., இன்றைக்கு நிதிஷ் கட்சியை (47) காட்டிலும் கூடுதல் இடங்களில் (72) முன்னிலை பெற்று முதல் பெரிய கட்சியாக பாஜ., உருவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,…

Read More

மக்கள் இயக்கமாகும் வேல் யாத்திரை !! மக்கள் போகுமிடமெல்லாம் வரவேற்பு !!

மக்கள் இயக்கமாகும் வேல் யாத்திரை !! மக்கள் போகுமிடமெல்லாம் வரவேற்பு !!

தமிழக பா.ஜ., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #துள்ளி_வருது_வேல், #VelYatra, #வெற்றிவேல்_யாத்திரை போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழக பாஜ., சார்பில் இன்று (நவ.,6) முதல் டிச.,6ம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த யாத்திரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருத்தணியில் தொடங்க உள்ள…

Read More

மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் வருகிறது !!

மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில்  கடுமையான சட்டம் வருகிறது !!

மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளோம். இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இச்சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையைத் தொடங்விட்டோம், விரைவில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். “வெளிநாட்டு பட்டாசுகளுக்கு பதிலாக நமது நாட்டில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே விற்கவும் பயன்படுத்தவும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தெய்வங்கள் அல்லது தெய்வங்களின் படங்களுடன் பட்டாசுகளை விற்பவர் அல்லது பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கவும்…

Read More

ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

ஹிந்து பண்டிகை என்பதால் தீபாவளிக்கு பட்டாசு விற்க தடையா ?

கொரோனாவின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகமாக இருக்ககூடும் எனவும், இதன் காரணமாக வயதானோர் மற்றும் குழந்தைகளின் சுவாசத்திற்கு பிரச்னை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு குறித்து பட்டாசு விற்பனையை வரும் 7 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையில் தடை செய்வது குறித்து டில்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டது.இதில் ராஜஸ்தான் மாநிலம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய முடிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்குமாநில அரசு…

Read More
1 62 63 64 65 66 181