தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன் எதிரொலி !!

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன்  எதிரொலி  !!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800′ ல் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பல பிரபலங்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தனர். முத்தையா முரளிதரனே, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என அறிக்கை விட்டார். இதனையடுத்து விஜய்சேதுபதியும் படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

Read More

2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் –  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

” ௨ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்” என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து பா.ஜ. சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசும் விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கும் அரசாக தமிழகமும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ. கூட்டணியில் விரிசல் இல்லை. அண்ணா பல்கலை விவகாரத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சம்பந்தமில்லாமல் பேசுவது உளறுவது தெளிவில்லாததே அக்கட்சியின்…

Read More

ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க கூட்டணிக்கு – கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி

ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க கூட்டணிக்கு –  கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தி.மு.க.,வில், துணை முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, கூட்டணி கட்சிகள் சில திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே மோதலாக வெடித்தது.அக்கட்சி இரண்டாக பிளவுபடப் போகிறது என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., ஏகமனதாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, முரண்டு பிடித்து வந்த பா.ஜ., கட்சி, ‘மீண்டும் அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம்’ என, அறிவித்து விட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில்,…

Read More

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும்….

Read More

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா…

Read More

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது…

Read More

பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுர வேகத்தில் செய்து வருகிறது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கி விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர் கதையாகி வருகிறது. அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர். காங்கிரசில் இருந்த குஷ்பு,…

Read More

விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நோய் பரவலை குறைக்க, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகள் செயல்படுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று…

Read More

முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பழனிசாமியை அதிமுக தேர்ந்தெடுத்தது

முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக பழனிசாமியை அதிமுக தேர்ந்தெடுத்தது

அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்து அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று (அக்.,07) அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏ.,க்களுடனும் தனித்தனி அணியாக உருவாகி ஆலோசனை நடத்தினர். மேலும், அமைச்சர்களும் இருவருடனும் மாறி மாறி ஆலோசனை நடத்தியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதல்வர் அறிவித்தார். குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , எஸ்பி வேலுமணி ,…

Read More
1 64 65 66 67 68 181