பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி
”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:…
Read More








