மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்
டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…
Read More









