ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை…

Read More

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கை பிரதமர்  மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கையில் சமீபத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தாராஜபக்ஷே பின்னர் வரும் பிப்., 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல உள்ளார். முன்னதாக இந்த (ஜனவரி) மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர்களின் பிரச்னை குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

பிஜேபி கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய வானதி சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்வை நடத்தும் அமைப்புக்களின் பின் புலத்தை நன்கு அறிந்து அதற்கேற்ப பயணியுங்கள் ! கனடா தமிழ் சங்கம் என்ற போர்வையில், கனடியத் தமிழர் தேசியவை(NCCT) என்ற அமைப்பினர், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பல மில்லியன் டொலர் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும், கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பினரான கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகளாவார்கள். கடந்த 10 வருடமாக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு எதுவும் செய்யாமல், பதுக்கிய பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை வைத்து, தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் !…

Read More

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

அய்யனார் சிலையுடன் வந்த தமிழக ஊர்தி !! மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அய்யனாருடன் வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  71ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜபாதையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றினார். நடப்பாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனாரோ கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில்…

Read More

ரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி

ரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி

ஈ.வெ.ரா., குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது. இதனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ‘துக்ளக்’ இதழின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 1971ல் சேலத்தில் நடந்த ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர்…

Read More

ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

” ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது” என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது : சேலத்தில் நடந்த பேரணியில் என்ன நடந்ததோ அதனை தான் ரஜினி கூறியுள்ளார். தி.க.,வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம். வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல்தானே. பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.,வினர் செய்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகின்றனர். ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை தி.க.,வினர் செய்கின்றனர். ரஜினி நியாயவாதி. நல்ல மனிதர். மனதில்…

Read More

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன – மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன –  மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார். இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட,…

Read More

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மத்திய, பா.ஜ., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தேசிய கல்வி கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், ‘நீட்’ தேர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் போராட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும், பா.ஜ.,வினர் இணைய தளத்தில் திருவள்ளுவரை காவி உடையில் படத்தை வெளியிட்ட போது, கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ‘தமிழகத்தை காவி மயமாக்க விட மாட்டோம்’ என்றும் பேசி வருகிறார். இதனால், தி.மு.க.,வினர் காவி நிற உடை அணிவதை கூட தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு, சென்னையில்,…

Read More

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

நடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து துக்ளக்…

Read More

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

திருவள்ளுவர் தினத்தை அவரை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழிலும், ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், Narendra Modi ✔ @narendramodi திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

Read More
1 76 77 78 79 80 181