விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

கோல்கத்தா துறைமுகத்தை தொடர்ந்து விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி, ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஜன.,12 அன்று நடைபெற்ற கோல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கோல்கத்தா துறைமுகத்திற்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான சுப்ரமணியன் சாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read More

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தோனேஷியா பண நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும். குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) தவறு ஒன்றும்…

Read More

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது. முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு. “காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது. இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….

Read More

நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் & 1 கோடி பேர் மேற்குவங்கத்தில்

நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் & 1 கோடி பேர் மேற்குவங்கத்தில்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உ.பி.,யில் சுட்டதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும் என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டது. இதில், பொதுச்சொத்துகள் பல சேதமடைந்தன. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் பேரணி நடந்தது. அதில் பேசிய மம்தா, மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப்…

Read More

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சன் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்சன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா ஜா கவின் தமிழகத்தின் மூத்த தலைவர் திரு H. ராஜா கேட்டுக்கொண்டார். குமரி மாவட்டம் நீங்கள் யாருக்காக வாக்களித்ததோ அவர்கள் தான் இன்று வில்சன் கொலையை கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சப் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்க

Read More

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

‘பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று, நெ.கண்ணன் கைது குறித்தும், கோலமிட்டவர்கள் கைது குறித்தும் காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அவர் கூறியதாவது: பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெ.கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார். சென்னையில்…

Read More

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு…

Read More

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வின் கை சற்று ஓங்கி உள்ளது. மாவட்ட கவுன்சிலர்களாக, அதிமுக கூட்டணி 243, திமுக கூட்டணி 267, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களாக அதிமுக கூட்டணி 2,165, திமுக கூட்டணி 2,330, மற்றவை 536 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணி…

Read More

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு…

Read More

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

ஜிஹாதி கூடத்தில் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், நீங்கள் வாராவாரம் வெள்ளி கிழமை தொழுஹை முடித்து வருகிறீர்ர்ஹல் .. உங்களுக்கு அல்லாஹ மீது நம்பிக்கை இல்லையா ? எப்படி இன்னமும் மோடி – அமித் ஷாவின் கதை முடியாமல் இருக்கிறது என்று கேட்டான் காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் !! அங்கே அமர்ந்திருந்த ஜிஹாதி கூட்டம் கை கொட்டி சிரிக்கிறது !! ஹிந்து பெரும்பான்மை நிறைந்த பாரத திருநாட்டில் பிரதம மந்திரிக்கும், உள்துறை அமைச்சருக்கும் இந்த நிலையென்றால் சாதாரண ஹிந்துக்களின் நிலையென்னவென்று யோசிக்கும் நேரத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். திராவிட – ஜிஹாதி கூட்டங்கள் இலங்கை தமிழரகளையும், தமிழிழத்தையும் அளித்ததுபோலவே, தற்சமயம் இந்தியாவையும், தமிழகத்தியும் அழிக்கும்…

Read More
1 77 78 79 80 81 181