இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சீனா பரந்துவிரிந்த நாடு என்பதால், பல்வேறு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளது; எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக, தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் சமீபத்தில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தற்போது பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின், 58வது கூட்டம் நடந்தது. இதில் சீனா, பூடானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய…

Read More

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சி முறையை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா இந்தியாவுடன் எல்லையில் தகராறு செய்ததுடன் ஜப்பானின் செங்காரு தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது. ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையப்புள்ளியாக மாற்றி உள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தும் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, ‘நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்’ இவ்வாறு கூறினார் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன்…

Read More

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 617 ஆக உள்ளது.

Read More

அரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு

அரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு

எல்லைப் பிரச்னையால் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணைய தளங்களை முடக்கும் முயற்சியில், சீன இறங்கியது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க, பேச்சு நடந்து வருகிறது.இந்நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கி இணைய தளங்களை முடக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக…

Read More

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு வட்டாரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20…

Read More

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல – டிரம்ப்

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல – டிரம்ப்

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது, அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல. எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதே’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவர் சமீபத்தில், போலீஸ் அத்துமீறலில் கொல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க, ராணுவத்தை அனுப்புவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அதிருப்திஆனால், இதற்கு, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பார், கூட்டுப் படைகளின் தலைவர், ஜெனரல் மார்க் மில்லே ஆகியோர், பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ராணுவத்தின் ஒரு பகுதியான, நேஷனல் கார்டு என்ற சிறப்புப் படையை, வன்முறையை ஒடுக்க, டிரம்ப் பயன்படுத்தினார். டிரம்பின் இந்த நடவடிக்கைகளால், ராணுவத்தின் முன்னாள், இன்னாள்…

Read More

கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

அமெரிக்காவில், இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்தாண்டு துவக்கத்தில், டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. மீண்டும் அவரே அதிபராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது, கள நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. இது குறித்து, அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு…

Read More

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணயாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பாக்.,கில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், பாக்., அரசு மறுத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வேதேச பயங்கரவாதியாக…

Read More

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ்…

Read More
1 15 16 17 18 19 48