உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே  ராஜினாமா

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 65, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். கிழக்காசிய நாடான ஜப்பானில், நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமை உடையவர் ஷின்சோ அபே, 65. அபே, இளம் வயதிலிருந்தே வயிறு தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறும் அளவுக்கு, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில், பிரதமர் பொறுப்பை கவனமாக கையாள முடியாது என்பதால், பதவியை ராஜினாமா செய்ய, அபே முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம்…

Read More

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸி அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆஸியில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக…

Read More

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ், 55, அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது. அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ் பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள்…

Read More

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

இலங்கை தாதா அங்கொட லொக்கா, 36. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் கோவையில் தங்கியிருந்தான். இவரது மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏழு தனிப்படைகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருவத்தை மாற்ற அங்கொட லொக்கா திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அவர் அணுகியுள்ளார். அங்கு தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக தனது மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை உண்மை என, நம்பிய டாக்டர்கள் அவருக்கு மூக்கில் கடந்த, பிப்., மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் மாறுபட்ட முகத்துடன் அங்கொட லொக்கா உலா…

Read More

டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியது; அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர், நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொரோனாவை கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா…

Read More

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க-கனடா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்…

Read More

கிழக்கு ஆப்பிரிக்க மாலவி நாட்டில் 5 மாதங்களிள் 7000 மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்க மாலவி நாட்டில் 5 மாதங்களிள் 7000 மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பரிக்க நாடான மாலவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அந்நாட்டு மாணவிகள் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 7,000 பேர் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா பேசியதாவது,…

Read More

அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

அமெரிக்க தேர்தலில் இ- மெயில் ஒட்டளிப்பு முறையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை தள்ளி வைக்கலாம் என அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு ( நவம்பர்) இறுதியில் நடக்கிறது. அமெரிக்காவை ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு, பொருளாதார பிரச்னை போன்றவற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் ஓரிரு மாகாணங்களில் பிரைமரி தேர்தலில் இ- மெயில் மூலம் ஓட்டளிக்க அனுமதிப்பட்டது. இதில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார். இது போன்று ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்காமல் ‘இ – மெயில்’ மூலம் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்ட முறை…

Read More

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!

அரசு நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 – 18 வரை பதவி வகித்தவர் நஜீப் ரசாக், 67. இவர் பிரதமராக பதவி வகித்தபோது, ‘1எம்டிபி’ என்ற அரசு முதலீட்டு நிறுவனத்தின், பல ஆயிரம் கோடி ரூபாயை, தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.360 கோடி அபராதம்இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு,…

Read More
1 13 14 15 16 17 48