கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹானோக், ‛ பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாவது தடவையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்த திட்டம் உள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் இரு மடங்காகி வருகிறது. ஊரடங்கு என்பது கடைசி முயற்சியாக இருக்கும். மண்டலவாரியாகவும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களின் உயிரை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,85,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,322…

Read More

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி சிலைகள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி வெண்கல சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சிங்கப்பூரில்வசித்து வரும் இவர் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார்.அவற்றில் தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்த படங்களை ஆய்வு செய்து தமிழக…

Read More

70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல் – சீனாவின் அடக்குமுறை மீண்டும் ஆரம்பம்

70களில் தப்பிச் சென்ற சீனர்களுக்கு சிக்கல் – சீனாவின் அடக்குமுறை மீண்டும் ஆரம்பம்

ஹாங்காங்வாசிகள் தற்போது சீன அரசால் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எழுபதுகளில் மா சேடாங் ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து ஹாங்காங்குக்கு குற்றவாளிகள் பலர் தப்பியோடினர். சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் முதல் பெரிய கடத்தல் விஷயங்களில் ஈடுபட்ட பலர் அப்போது சீனாவின் நீதிமன்ற தீர்ப்பு, மரணதண்டனை உள்ளிட்டவற்றுக்கு பயந்து கடல் வழியாக ஹாங்காங்குக்குத் தப்பிச்சென்றனர். மேலும் அப்போது சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் பலர் அங்கு குடிபெயர்ந்தனர். தங்களது இருபத்தைந்தாவது வயதில் ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்த பலர் பலருக்கு தற்போது 50 வயதிற்கு மேல் ஆகிறது பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங்கில் இவர்கள் பல ஆண்டுகாலமாக சுதந்திரமாக ஜனநாயக ஆட்சியில் வாழ்ந்து பழகி விட்டனர். 1997 ஆம் ஆண்டு பிரிட்டன் தனது…

Read More

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

சீனாவின் திட்டம்பி.ஆர்.ஐ., எனப்படும், ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்’ திட்டத்தின் மூலம், பல நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கத்தில் இணைக்க, சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு, தெற்காசிய நாடுகளுக்கான துாதர்களை, சீனா நியமித்து வருகிறது.சீனாவைச் சேர்ந்த, யு.எப்.டபிள்யூ.டி., எனப்படும் ஐக்கிய முன்னணி பணித் துறை, மற்ற நாடுகளில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்டவை மூலம், சீனா உள்ளே நுழைவதற்கான வழிமுறைகளை வகுத்து தரும். அதன்பின், அங்கு தன் ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்தை சீனா மேற்கொள்ளும்.சீன அதிபர், ஷீ ஜிங்பிங் இந்தத் துறையில் பணியாற்றியவர். தற்போது, பாகிஸ்தானின் புதிய துாதராக, இந்தத் துறையில் பணியாற்றிய,…

Read More

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகிறது !!

அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகிறது !!

இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வ விமானம் சென்றிருப்பது, ஒரு வரலாற்று நிகழ்வாகும். கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான முதலாவது முறைப்படியான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும் இது. இஸ்ரேலிய அதிகாரிகளோடு கூடவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் விமானத்தில் இருந்தார். விமானத்தில் இருந்து கீழே இறங்கிவரும்போது, “மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) க்கான புதிய அத்தியாயம் இது” என்று கூறினார். இந்த புதிய அத்தியாயத்தை எழுத உதவிய ஜாரெட் குஷ்னர் ( அவர் ஒரு யூதரும் கூட), இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எப்போதும் உடனிருந்தார். இந்த…

Read More

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் வடக்கு பகுதியில் வாழும் மங்கோலிய இன மக்கள் சீனாவின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். மங்கோலிய மொழி தான் எங்கள் தாய்மொழி அதை ஒரு போதும் இழக்கமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் வசிக்கும் மங்கோலியர்கள் தங்கள் தாய்மொழியை தனித்துவ அடையாளமாகவும், கலாச்சாரமாகவும் கருதி வாழ்கின்றனர். அவர்களின் தாய்மொழி உணர்வை புண்படுத்தும் விதமாகவும், சீன கலாச்சாரத்தை அவர்கள் மீது திணிக்கும் விதமாகவும் சீனா புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. சீன அரசின் அடக்குமுறை குறித்து மங்கோலியர்கள் கூறுகையில், ‘ சீனாவின் புதிய கல்வி கொள்கையால் எங்கள்…

Read More

சட்டமும் ஊரண்டங்கும் பொதுமக்களுக்கே… எங்களுக்கு கிடையாது – அமெரிக்க லிபெரல் காங்கிரஸ் தலைவி

சட்டமும் ஊரண்டங்கும் பொதுமக்களுக்கே… எங்களுக்கு கிடையாது – அமெரிக்க லிபெரல் காங்கிரஸ் தலைவி

அமெரிக்காவில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ‘சலுான்’ கடைக்கு தனக்கவே திறக்கவைத்து முக கவசம் அணியாமல் சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், ஒவ்வொரு மாகாணங்களிலும், வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவில், சலுான் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சி உறுப்பினருமான நான்சி பெலோசி, ஆகஸ்ட் மாதம், 31ம் தேதி, கட்டுப்பாடுகளை மீறி, இங்குள்ள ஒரு சலுானுக்கு சென்றுள்ளார். அனுமதிஈரமான தலையுடன், முக கவசத்தை முகத்தில் அணியாமல், கழுத்தில் அணிந்தவாறு, சலுானில், பெலோசி நடந்து செல்லும், சி.சி.டி.வி., காட்சிகளை கடையின் உரிமையாளர் வெளியிட்டு உள்ளார். இது, தற்போது சர்ச்சையை…

Read More

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

பப்ஜி உள்ளிட்ட 118 சைனா (ஆப் ) செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்த பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு…

Read More

அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ கலாசார மையங்கள் மூடப்படும் – அமெரிக்கா அதிரடி

அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ கலாசார மையங்கள் மூடப்படும் – அமெரிக்கா அதிரடி

சீன அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் உளவாளிகளை உருவாக்குகின்றன. இதனால், அமெரிக்க பல்கலைகளில் உள்ள சீன ‘கன்பூசியஸ்’ என்ற கலாசார மையங்கள் இந்தாண்டுக்குள் மூடப்படும் என வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிரடியாக அறிவித்துள்ளார். சீனா தங்கள் நாட்டின் மொழி, கலாசாரம், பெருமைகளை உலக நாடுகளில் பரப்புவதற்காக கன்பூசியஸ் கல்வி நிறுவனம் என்ற ஒன்றை 2004ம் ஆண்டில் தொடங்கியது. சீன தத்துவ அறிஞர் பெயரிலான அந்நிறுவனம், உலக நாடுகளில் உள்ள 160 பல்கலைக்கழங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் அமெரிக்க பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இயங்கி வருகின்றன. அவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் இழுத்து மூடுவோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். கொரோனா…

Read More

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

உலக சக்தியாக இந்தியா உருவெடுக்க அமெரிக்கா உதவும் !!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க – – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், ‘இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு’ நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் பேசியதாவது: உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும் வலிமையைப் பெற்றுள்ளது. உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா – அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்த நாடும், ராணுவ பலத்தில்…

Read More
1 12 13 14 15 16 48