இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த…

Read More

இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து “பிரான்ஸுக்கு ” ஆதரவாக என்றும் நிற்போம் – இந்திய பிரதமர் மோடி

இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து “பிரான்ஸுக்கு ”  ஆதரவாக என்றும் நிற்போம் – இந்திய பிரதமர் மோடி

பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மிகவும் கொடூரமான முறையில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் பிடித்தபோது, அல்லாஹு அக்பர் என தொடர்ச்சியாக அவர் முழக்கமிட்டதாக நீஸ் நகர மேயர் தெரிவித்தார். தேவாலயத்துக்குள் ஒரு வயோதிக பெண், ஒரு ஆண் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டனர். பல முறை கத்திக்குத்து காயங்களுடன் உயிர் தப்பிய பெண் அருகே உள்ள…

Read More

பிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பேர் குத்தி கொலை

பிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பேர் குத்தி கொலை

பிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கிய பயங்கரவாதி, மத முழக்கங்கங்களை எழுப்பியதாக, நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளதால். இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரான்சில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ளதாவது: பிரான்சில்…

Read More

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா ? சட்டத்தின் பிடி இருக்கிறது !!

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா ? சட்டத்தின் பிடி இருக்கிறது !!

அமெரிக்க அதிபர் உட்பட அந்நாட்டின் எம்.பி.க்கள் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, சமூக ஊடக பயனர்களின் பதிவுகள் தொடர்பாக அந்த நிறுவனங்களை விசாரிக்கும் வழக்கம் இல்லாதபோதும், இதை இப்படியே விட்டால், அது தவறான பழக்கமாகி விடலாம் என சில எம்.பி.க்கள் கூறியதையடுத்து, இந்த விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த விசாரணைக்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்ஸே, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக அழைக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் தகவல் தணிக்கை செய்யப்படுவது குறித்து கவலைப்படும் அதே சமயம், தவறான தகவல்கள் அதன்…

Read More

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஏமி கோனி பாரெட் தேர்வு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஏமி கோனி பாரெட் தேர்வு

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஏமி கோனி பாரெட், 48, பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், ஒன்பது நீதிபதி பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்பவர், இறக்கும் வரை, அந்தப் பதவியில் தொடர்வது வழக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவரை, அதிபர் நியமிக்கலாம். அந்த நியமனத்துக்கு, அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடா கின்ஸ்பாக், 87, உடல்நலக் குறைவு காரணமாக, சமீபத்தில் காலமானார். இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த, ஆமி கோனி பாரெட்டை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அதிபர் டிரம்ப் நியமித்தார்.இந்த நியமனத்துக்கு, செனட் நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது….

Read More

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை – எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை –  எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும். இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது…

Read More

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளன. இந்த பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன. ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவ பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டம்,…

Read More

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் உயரதிகாரியை ராணுவ வீரர்கள் கடத்தி சென்று அவமதித்துவிட்டதாக கூறி, போலீசார், ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கராச்சியில், ராணுவம் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள கட்சிகள், ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கராச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவான் கைது…

Read More

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை…

Read More
1 10 11 12 13 14 48