பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை,…
Read More









