பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று

பாக்.,கின் பிரபல கொடையாளர் அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி கடந்த ஏப்., 15ல் பாக்., பிரதமர் இம்ரானை சந்தித்து கொரோனா நிவாரணத் தொகையாக ரூ 1 கோடி வழங்கி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு நன்கொடை வழங்கியவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது   இது குறித்து எதியின் மகன் கூறியதாவது, ‘ கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து நீடித்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து பாதிப்பு உறுதியானது. இவர் தற்போது இஸ்லாமாபாத்தி்ல் நலமாக உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை தனிமையில் இருக்கிறார். இவ்வாறு கூறினார். இதன்காரணமாக பிதமர் இம்ரான் கானும் கொரோனா…

Read More

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்

உலக சுகாதார அமைப்பிற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்க அதிபர்  டிரம்ப் நிறுத்தினார்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார். டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம்,…

Read More

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் தற்போது கொரோனா குறித்த ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் 600 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இன்னும் உறுதி செய்யப்படாத இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை. இவர்கள் என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை பெறவில்லை என்பதால் இவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிகர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்.,3ம் தேதி வரை 4,100 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.217 பேர்…

Read More

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு…

Read More

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி மன்னர் குடும்பத்தி்ல், உயர் பதவியில் உள்ள 12 பேர் உள்பட அரண்மணையில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கொரோனாவுக்க 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியில் உள்ள 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ரியாத் மாகாண கவர்னராக உள்ள பைசல் பின் பந்தர் அப்துல்லஜீஸ் அல் சவுத், என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து…

Read More

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141 பேர் உயிரிழந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது. அவர்களை அனுமதித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்’ என, மெக்சிகோ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியுள்ளது. இந்நிலையில், தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிற்பித்தார். அந்த நகரில் வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.இதனால், போதைப் பொருட்களை கடத்த முடியாமல் தவித்த ஒரு கும்பல், மேயரைக் கொல்ல…

Read More

ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை. 3.4 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட, வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்து, பாதுகாப்புக் கவசங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, தற்போது அதிகளவில் ‘என்95’ ரக முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு உடைகளைத் தயாரித்து, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.சீனாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், தலா 200 கோடி முகக் கவசங்களை கேட்டு…

Read More

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

‘கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்’ என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார். Boris Johnson #StayHomeSaveLives ✔ @BorisJohnson Another quick update from me on our campaign against #coronavirus. You are saving lives by staying at home, so I urge you to stick with it this weekend, even if we do have some fine weather.#StayHomeSaveLives போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (3ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும்…

Read More

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது. பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக…

Read More

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:…

Read More
1 18 19 20 21 22 48