டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’
டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில்,…
Read More








