சபரிமலையில் வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்கள் கைது – கேரள போலீசார் நடவடிக்கை
சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்களை கேரள போலீசார் கைது செய்தனர். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதனால் கேரளாவில் கலவரங்கள் வெடித்தன. இதனிடையே சபரிமலை செல்லும் வழியில் எருமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு தமிழகத்தை சேர்ந்த பெண்கள் வர இருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திருப்பூரை சேர்ந்த…
Read More








