வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

வாட்சப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ : பாபா ராம்தேவ் அறிமுகம்

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், வாட்சப் செயலி(app)க்கு போட்டியாக, கிம்போ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் திஜாராவாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த கிம்போ செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங்பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு, இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி அழைப்புகள், வீடியோ காலிங் வசதிகளோடு மட்டுமல்லாது ஆடியோ, போட்டோஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கீஸ், லொகேசன், ஜிப், டூடூல் உள்ளிட்ட வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது வாட்சப்பிற்கு…

Read More

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ நிறுவன அதிபர், மெஹுல் சோக்சி.இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், அதன் அதிகாரிகள் உதவி யுடன், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி யோடினர். இவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், பஞ்சாப் நேஷனல்…

Read More

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்

மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மத்தியப்பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், பிரதப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் லோதி(வயது70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பிரதப்புரா கிராமத்தில் தனது சகோதரர் ஹல்கே லோதியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக சில ஏக்கர்கள் நிலம் இருக்கிறது. ஆனால், விவசாயம் செய்ய நிலம் இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பு போன்ற காரணங்களால், விவசாயத்தை முறையாகச் செய்யமுடியவில்லை. கோடைகாலத்தில் குடிப்பதற்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து, சீதாராம் லோதி தனது நிலத்தில் கிணறு வெட்டத் தீர்மானித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிறபகுதியில்…

Read More

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி

எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், அங்கு சுமை தூக்கும் கூலியாக உள்ள ஸ்ரீநாத், கேரள அரசு நடத்தும் சிவில் தேர்வில் வெற்றியடைந்து விரைவில் பணியில் அமர உள்ளார். பொதுத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் என்றாலே, எப்போதும் தங்களை சுற்றி புத்தகங்களுடன் இருப்பார்கள் என்ற நிலையை ஸ்ரீநாத் தகர்த்தெறிந்துள்ளார். ஸ்ரீநாத், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேசனில், சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சாதித்து உயரிய பணியில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஸ்ரீநாத், அதற்கான வழிகளில் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தார். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேசன்களில்…

Read More

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளி சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013 ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாராமை கோர்ட்டிற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை…

Read More

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு

டில்லியில் மாயமான குழந்தைகள் குறித்து டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், உங்களிடம் முக அடையாளங்கள் கண்டறியும் சாப்ட்வேர் இருந்தும் ஏன் இதுவரை மாயமான குழந்தைகளை கண்டறியவில்லை என டில்லி போலீஸ் கமிஷனருக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த டில்லி போலீஸ் கமிஷனர், முக அடையாளம் கண்டறியும் சாப்ட்வேர் உள்ளது. ஆனால் மாயமான குழந்தைகள் குறித்த புள்ளிவிபத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்க மறுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து புள்ளிவிபத்தை டில்லி போலீசிற்கு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை ஏற்று, மாயமான 7 லட்சம் குழந்தைகளை பற்றிய புகைப்படத்துடனான புள்ளி விபரத்தை மத்திய பெண்கள் மற்றும்…

Read More

சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண்  டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

உலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து…

Read More

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

ஐதராபாத்: தெலுங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து, கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை…

Read More

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். சுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலில் கருங்கல்லை வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற…

Read More

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை,…

Read More
1 26 27 28 29 30 35