‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக கொடிகட்டி பறக்கும் அமேசானில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.  தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொழிலாளர் யூனியன் அமேசான் ஊழியர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள 7 அமேசான் குடோன்களில் பணிபுரியும் இந்த ஊழியர்களை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. இன்று அமேசான் பிரைம் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், அமேசான் நிறுவனத்துக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ‛பிரைம் டே’ தற்போது கொரோனா தாக்கம் காரணமாக கொண்டாட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனசை அமேசான் நிறுவனம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய இந்த…

Read More

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. அதன்படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க…

Read More

நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

நவராத்திரி போட்டியில் வென்று சான்றளிக்கப்பட்ட நவராத்திரி நக்ஷத்திரமாகுங்கள்

எல்லோருமே நட்சத்திரம்தான். அனைவருக்கும் அவர்களின் தன் தன் திறமைகள் உள்ளன. இந்த போட்டி உங்கள் திறமைகளை கண்டறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். நீங்கள் பங்கேற்று வென்று சான்றளிக்கப்பட்ட “நவராத்திரி நக்ஷத்திரம்” ஆகவும். வரவிருக்கும் நவராத்திரியில் போட்டி நிகழ்கிறது. நான்கு வெவ்வேறு வழிகளில் பங்கேற்கலாம் : 1) ராம் லீலா 2) தேவி துர்கா 3) கன்யா பூஜை செய்வது 4) அல்லது நவராத்திரியைக் கொண்டாடும் உங்கள் தனித்துவமான வழக்கத்தைக் காண்பித்தல். பாடுவது, நடனம் ஆடுவது, ஆடை அணிவது, படம் வரைவது (படம்) போன்ற வீடியோக்களை அனுப்புங்கள், மேலும் நீங்கள் வரைபடங்களின் படங்களை அனுப்பலாம், அலங்கரிக்கலாம், நவராத்திரி அலங்காரம் போன்றவற்றை அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், வயது…

Read More

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

‘கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம்.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக சுகாதார நிறுவனம் 130 நாடுகளை நாடுகளில் கணக்கெடுப்பு…

Read More

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்’ டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் கொரோனா பரவும் சூழலில் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் அவசியமாகிறது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது COVID-19 RT-PCR கி்ட்டுகள் வாயிலாக நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை அறிய 24 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த…

Read More

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

அமெரிக்காவில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க, மூடப்பட்ட பெரும்பாலான பள்ளிகள், கடந்த மாத துவக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. அதிகமானோர் பலியான நியூயார்க் நகரில், இன்று, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில், 2 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது, 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்து உள்ளது.மிசிசிபி மாகாணத்தில் தான், அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது தான், பாதிப்பு அதிகரிக்க காரணம். பள்ளி குழந்தைகள் முக…

Read More

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் இன்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள்…

Read More

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது

தன்வந்த்ரி ஹோமம் 1008 முறை மந்திரங்கள் கூறி அக்கினியில் ஆஹுதி விட்டு 108 மூலிகைகள் கொண்டு அனைவரின் ஆரோக்கியத்திற்காக செய்யப்பட்டது. உங்களுக்காகவும் மற்றும் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்த்தனைகளும் சங்கல்ப பிரார்த்தனை செய்யப்பட்டது. நீங்களும் உங்களின் அன்பர்களும் நண்பரகளும் நீடுடி நலமுடன் வாழ்க !! இந்த வீடியோவை துவக்க சங்கல்பத்திலுருந்து பார்க்கவும்.. மற்றவரோடு பகிரவும் ?? https://youtu.be/8mNaqTYNBqk ?? உங்களின் ப்ரார்தனைகளோடு துவங்கி ஹோம மந்திரத்தை சேர்ந்து உச்சரிக்கவும். 1008 முறை கூறவும். இயலாவிட்டால் 21 முறை அல்லது 108 முறை கூறவும். பல தினங்களில் இந்த மந்திரத்தை விதியோயோவை பார்த்து… உங்களின் வீட்டில் ஹோமம் நடப்பதுபோல் பாவித்து விடியோவோடு சேர்ந்து மந்திரம் கூறவும் ……

Read More

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, ‘தினமலர்’ நாளிதழின், கோவை பதிப்பு வெளியீட்டாளர், இல.ஆதிமூலத்திற்கு, காஞ்சி சங்கராச்சாரியார், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அருளாசி. சனாதன தர்மத்தில், ‘உண்மை’ மிகச் சிறந்த நல்லொழுக்கமாக பார்க்கப்படுகிறது. சிந்தனை, வாக்கு, செயல்களில் உண்மையை கடைப்பிடிப்பது தர்மமாகும்.நம் பாரம்பரியத்தில், பேசப்பட்ட வார்த்தைகள், பல்வேறு வகைகளில் எழுத்து வடிவில் துல்லியமாக பதிவிடப்பட்டுஉள்ளன. அது கற்களில், தாமிர பத்திரத்தில், கையெழுத்து பிரதிகள் என, பல ரூபங்களில் உள்ளது. பேசப்பட்ட வார்த்தைகள் மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம், உண்மை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நம் சாஸ்திரத்தில், எழுத்துக்கள் கடவுள்களாக கருதப்பட்டு, அக் ஷர…

Read More

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவலை அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார். தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ‘சிகரம்’ தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் ‘பாலு’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன்,…

Read More
1 41 42 43 44 45 77