இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறப்பு

நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது. இதன் திறப்பு விழா ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை…

Read More

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள்…

Read More

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்

1993-ல் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் டைகர் மேமன், யாகூப் மேமன், யுசுப் மேமன். இவர்களில் யாகூப் மேமனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2015-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யுசுப் மேமனுக்கு தடா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த யுசுப் மேமனுக்கு இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்தார்.

Read More

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!

பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, ‘நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்’ இவ்வாறு கூறினார் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன்…

Read More

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்த குற்றத்திற்காக ரெஹனா பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் ரெஹானாபாத்திமா.பெண் உரிமைகளுக்காக போராடுவதாக கூறி கொள்ளும் இவர் தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பரபரப்பை உருவாக்கி உள்ளார். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னைக்காக 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போல பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி பரபரப்பை உருவாக்கி வருகிறார். தற்போது தன் இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை கொண்டு தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து…

Read More

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் செவ்வாயன்று, ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், ரத யாத்திரையை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ரத யாத்திரை நடக்க உள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் ரத யாத்திரையின்போது, லட்சக்கணக்கான மக்கள் குவிவர். நம் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர்.’கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த,…

Read More

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் வரும் ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொழில்கள் செழிக்கவும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும் நிகழ்த்தப்படும். உங்கள் ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்வோம். உங்களை சங்கல்பத்தில் சேர்க்க +1 647 964 4790 என்ற எண்ணில் உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திறம் (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை ) வாட்ஸ்அப் செய்யலாம். இது விளக்கத்துடன் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இருக்கும். இந்த ஹோமம் / யாகத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும் என்பதால் அனைவரும் பயனடைய இந்த செய்தியை உற்றார்,உறவினர், நண்பர்கள் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஹோமம் முடிந்த பிறகு வீடியோவை…

Read More

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணங்களில் பதிவாகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கனடியர்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிதாக 473 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 97,328 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் நோய் பாதிப்புக்கு புதிதாக 64 பேர் பலியாகினர்….

Read More

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப்பிறகு வரும் ஜூன் 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13ல் மூடப்பட்டது. தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே…

Read More
1 45 46 47 48 49 77