பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சிக்கும் குரல் கொடுக்க வேண்டும் – சூர்யா
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்கியபிறகு தமிழம் முழுக்க போராட்டம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. அமீர், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டதிரையுலகினரும் களம் இறங்க துவங்கிவிட்டனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையைவெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது… பண்பாடு, அடையாளம், வரலாறு போன்றவார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின்பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறிஇருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்னைகளுக்கு இளைஞர்களைஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள். தன்னெழுச்சியான போராட்டங்களின் எப்போதுமே உண்மை இருக்கும். பலநூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து…
Read More









