ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, இந்தியா
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது. 2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது…
Read More







